• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

Chennai Heavy Rains: தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 300 மி.மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழையால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு இருக்கிறார்.

Written ByUmabarkavi K
Published: Oct 18, 2026, 10:32 AM IST|Updated: Oct 18, 2026, 11:03 AM IST
joinshare
சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

2

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

3

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

4

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

5

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Heavy Rains: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு தொடங்கிய மழை,  நள்ளிரவு பெய்துள்ளது.  குறிப்பாக, சென்னை மாநகரில் முக்கிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

சென்னையில் அதி கனமழை

ஒரு மாதமாக சென்னை வறண்டு காணப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் நேற்று இரவு 6 இடங்களில் மிக அதி கனமழையும், 12 இடங்களில் அதி கனமழையும், 18 இடங்களில் கனமழையும் பெய்திருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.  அதிகாலை 1.30 மணி வரை பாரிஸ் பகுதியில் 354.5 மி.மீ, கத்திவாக்கத்தில் 334.2 மி.மீ. சத்தங்காட்டில் 253.6 மி.மீ, திருவொற்றியூரில் 218.1 மி.மீ, எண்ணூரில் 208.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல்முறையாக 300 மி.மீ., மழைப்பொழிவு சென்னையில் பதிவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

ஏரிகளின் நீர்வரத்து விவரம்

சென்னையில் அதிகனமழை பதிவாக இருக்கும் நிலையில், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப்பதிவு நிலவரமானது அக்டோபர் 18, 2026 காலை 6 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் சென்னையின் முக்கிய ஆறு ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவான 13.222 டி.எம்.சி-யில் தற்போது 4.754 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதுடன், இது மொத்த கொள்ளளவில் 35.9 சதவீதமாகும். குறிப்பாகப் புழல் (Redhills) ஏரியில் 119 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இதன் நீர்மட்டம் 14.95/21.20 அடியும், 3.300 டிஎம்சி மொத்தக் கொள்ளளவில் 2.037 டிஎம்சி நீர் இருப்பும், 1485 கியூசெக்ஸ் நீர்வரத்தும், 196 கியூசெக்ஸ் வெளியேற்றமும் பதிவாகியுள்ளது.

சோழவரம் (Cholavaram) ஏரியில் 68.00 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி இருக்கும் நிலையில், சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 2.91/18.86 அடியும், 1.081 டி.எம்.சி மொத்தக் கொள்ளளவில் 0.130 டி.எம்.சி நீர் இருப்பும், விநாடிக்கு 102 கனஅடியாகவும், 8 கியூசெக்ஸ் நீர் வெளியேற்றமும் உள்ளது.

மேலும் படிக்க: டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள்.. தீபாவளிக்கு விற்பனை? விலை எவ்வளவு?
 

 

Chennai Water Supply Lakes as on 18.10.2026 - Inflow jumps in Puzhal to 1400 cusecs from run-off while in Poondi to 1000 cusecs. https://t.co/IhNev1Ie29

— Tamil Nadu Weatherman (@praddy06) October 18, 2026

 

செம்பரம்பாக்கம் (Chembarambakkam) ஏரியில் 54.00 மி.மீ மழை பதிவாகி உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 14.21/24.00 கன அடியும், 3.645 டி.எம்.சி மொத்தக் கொள்ளளவில் 1.390 டி.எம்.சி நீர் இருப்பும், விநாடிக்கு 655 கனஅடி நீர்வரத்தும், 188 கனஅடி நீர் வெளியேற்றமும் பதிவாகியுள்ளது.

பூண்டி (Poondi) ஏரியில் மிக அதிகபட்சமாக 32.00 மி.மீ மழையும், நீர்மட்டம் 21.47/35.00 அடியும், 3.231 டி.எம்.சி மொத்தக் கொள்ளளவில் 0.397 டி.எம்.சி நீர் இருப்பும், விநாடிக்கு 150 கனஅடி நீர்வரத்தும், 529 கியூசெக்ஸ் நீர் வெளியேற்றமும் உள்ளது.

வீராணம் (Veeranam) ஏரியில் மழைபொழிவு இல்லை என குறிப்பிட்டுள்ளார். வீராணம் ஏரியின் நீர்மட்டம் 11.47/15.60 அடியும், 1.465 டி.எம்.சி மொத்தக் கொள்ளளவில் 0.568 டி.எம்.சி நீர் இருப்பும், 340 கியூசெக்ஸ் நீர்வரத்தும், 118 கியூசெக்ஸ் வெளியேற்றமும் பதிவாகியுள்ளது என்று கூறினார்.

மேலும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை (Kannankottai Thervoy Kandigai) ஏரியில் 14.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நீர்மட்டம் 27.81/36.61 அடியும், 0.500 டி.எம்.சி மொத்தக் கொள்ளளவில் 0.232 டி.எம்.சி நீர் இருப்பும், 20 கியூசெக்ஸ் நீர்வரத்தும், 18 கியூசெக்ஸ் வெளியேற்றமும் பதிவாகி  உள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க: சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழையா? நவம்பரில் என்ன நடக்கும்? ஹேமசந்திரன் கணிப்பு!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather