• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

இசையமைப்பாளர் தேவாவின் மரணம், திரையுலகையே உலுக்கியிருக்கிறது. இந்த சமயத்தில், தேவாவின் இறுதி சடங்குக்கு நடிகர் அஜித் வராதது குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 18, 2026, 10:15 AM IST|Updated: Oct 18, 2026, 10:32 AM IST
joinshare
அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..
Image Credit: Ajith Deva | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

2

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

3

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

4

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

5

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகின், முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர், தேனிசைத்தென்றல் தேவா. கோலிவுட்டை எடுத்துக்கொண்டால், இசையுலகில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளர்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர்தான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் தன்னுடைய மெட்டால் பலரையும் கவர்ந்தவர் தேவா. நம் தமிழ்நாடு முதல்வர் விஜய் நடித்த ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் தேவா, 76வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தேவா மறைவு-கண்ணீரில் திரையுலகம்..!

தேவாவின் இறப்பு, தமிழ் சினிமாவின் பேரிழப்பாக கருதப்படும் இந்த சமயத்தில், திரையுலகை சேர்ந்த பலர் தங்களின் திரைத்துறை பணிகளை ரத்து செய்து முதல் வேளையாக தேவாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர். குறிப்பாக, இசையமைப்பாளர் இளையராஜா, வீடியோ வாயிலாக தேவாவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு, தன்னுடைய ஸ்டுடியோவின் இசை பணிகளை ரத்து செய்திருக்கிறார். முதல்வர் விஜய்யும் நேரில் வந்து தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்னும் பல திரையுலகினர் தேவாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் வண்ணம் இருக்கின்றனர்.

அஜித் வராதது ஏன்?

தற்சமயத்தில், தன் திரையுலக பணிகளில் இருந்து தள்ளியே இருக்கும் நடிகர் அஜித்குமார், தன்னுடைய கார் ரேஸிங் வேலைகளில் பிசியாக இருக்கிறார். ஷூட்டிங் நடக்கும் போது தவிர, பிற நேரங்களில் கேமராவின் கண்களில் இருந்து தள்ளியே இருக்கும் அவர், பெரும்பாலும் இது போன்று திரையுலக பிரபலங்களின் இறுதி சடங்கிற்கு வருவதையும் தவிர்ப்பார். ஆனால், ஒரு சில முக்கியமான திரையுலக பிரபலங்களின் இறப்பிற்கு அவருடைய மேனேஜர் மூலம் இரங்கல் தெரிவிப்பார்.

இசையமைப்பாளர் தேவா இறந்து 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வரை அஜித் ஒரு இரங்கல் பதிவை கூட வெளியிடாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.

அஜித் படங்களுக்கு இசையமைத்த தேவா!

இசையமைப்பாளர் தேவாவின் இறப்பிற்கு அஜித் வராதது கவனம் பெறுவதற்கு பின்னால், ஒரு பெரிய காரணம் இருக்கிறது. தேவா, எப்படி விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல படங்களுக்கு இசையமைத்தாரோ அதே போல, அஜித்தின் பல படங்களுக்கும் இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக, அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு உந்துகோலாக இருந்த படங்களான ஆசை, வான்மதி, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து அவருக்கு ஹிட் பாடல்கள் கொடுத்தது தேவாதான்.

மேலும் படிக்க | தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; துக்கத்தில் திரையுலகம்

அஜித்-தேவாவின் காம்போ அதோடு நின்று விடவில்லை. நேசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு, உண்ணை தேடி, வாலி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, சிட்டிசன், ரெட் உள்ளிட்ட படங்களுக்கு தேவாதான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். இப்படி, அஜித்துடன் இவ்வளவு நெருக்கமாக பணியாற்றிய ஒருவர் இறந்திருக்கையில், அதற்கு நடிகர் அஜித் எந்த ரியாக்ஷனையும் ஊடகத்தின் முன்னிலையில் கொடுக்காமல் இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அனைவருக்கும் இப்படித்தான் செய்கிறாரா?

அஜித், இறுதி சடங்குகளுக்கு வருவதை தவிர்க்கிறார் என்பது உண்மையாயினும், அவர் குறைந்தளவிற்கு இரங்கல் தெரிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார். இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவின் மறைவிற்கு அவர் அப்படி ஒரு இரங்கல் பதிவைத்தான் தன்னுடைய மேனேஜர் மூலம் வெளியிட்டார். ஆனால், தேவாவிற்கு அப்படி எதையும் வெளியிடாதது பேசுபொருளாகி இருக்கிறது.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு, இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், தேவாவின் இசையுலக சேவையை சிறப்பிக்கும் வகையில், அவருடைய இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் தேவாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | தேவாவின் கடைசி ஆசை.. நிறைவேறாமலே போனது! சான்ஸ் கொடுக்காத ரஜினி.. என்ன தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema