• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! அக்.1 முதல் அபராதம்..ஈசியா எப்படி செலுத்துவது?

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! அக்.1 முதல் அபராதம்..ஈசியா எப்படி செலுத்துவது?

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த, செப்டம்பர் 30ஆம் தேதியான இன்றே கடைசி நாளாகும். இன்று கட்ட தவறினால், அக்டோபர் 1 முதல் அபராதம் செலுத்தி கட்ட வேண்டியிருக்கும். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 30, 2026, 10:16 IST|Updated: Sep 30, 2026, 10:31 IST
joinshare
சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! அக்.1 முதல் அபராதம்..ஈசியா எப்படி செலுத்துவது?
Image Credit: Property Tax | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், நடப்பு நிதியாண்டில் முதல் பாதிக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியை இன்றைய தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

சொத்து வரி செலுத்த கடைசி நாள்!

உள்ளாட்சி அமைப்புகளில், வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும், குறித்த காலத்திற்குள் வசூலை முடிக்கவும், சொத்து வரி குறித்த அறிவிப்புகளை நகராட்சி நிர்வாக துறை வெளியிடுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கும், சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998ன் பிரிவு 117ன் படி, பணியாளர்களின் தொழில் வரியினை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்த் நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாக இருக்கிறது.

இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதாவது இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.

மேலும் படிக்க | பூந்தமல்லி டூ வடபழனி.. மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிப்பு - எவ்வளவு?

தமிழகத்தில், நகராட்சி நிர்வாகத்துறையை பொருத்தவரை, அதன் கீழ் 25 மாநகராட்சிகளும், 146 நகராட்சிகளும், 479 பேரூராட்சிகளும் உள்ளன. பொதுவாக, சொத்து வரி இரண்டு அரையாண்டுகளுக்கு வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்த முதல் அரையாண்டிற்கு, செப்டம்பர் 30ஆம் தேதி வரையும், இரண்டாவது அரையாண்டிற்கு, மார்ச் 31 வரையும் கால அவகாசம் இருக்கும்.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு:

சென்னை மாநகராட்சியின் அறிவிப்பின்படி, அக்டோபர் 1 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி, நிலுவைத்தொகைக்கு தனி வட்டி வசூலிக்கபடும் என எச்சர்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சொத்து வரியை செலுத்தவில்லை என்றால், அதற்கு மாதத்திற்கு 1சதவீத எளிய வட்டி அபராதத்தை கட்ட வேண்டும். சமீபத்திய தமிழ்நாட்டு அர்சின் புதிய சட்ட திருத்தத்தின் படி, ஒரு நிதியாண்டு முடிந்த பிறகும், சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலுவை தொகைக்கு, 0.5% வட்ட் விதிக்கப்படும் வகையில் விதிகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன.

சொத்து வரி செலுத்த ஆன்லைன் இணையதளங்கள்:

சென்னை வாசிகள், சென்னை மாநகராட்சி இணையதளமான chennaicorporation.gov.in மூலமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதி மக்கள் TN Urban E-Pay தளம் மூலமாகவும் ஆன்லைனில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தலாம்.

மேலும் படிக்க | ஒரே ரயிலில் பிரதமர் மோடி-முதல்வர் விஜய்! எப்போ, எங்கு தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai