• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /ஒரே ரயிலில் பிரதமர் மோடி-முதல்வர் விஜய்! எப்போ, எங்கு தெரியுமா?

ஒரே ரயிலில் பிரதமர் மோடி-முதல்வர் விஜய்! எப்போ, எங்கு தெரியுமா?

சென்னையில் நடக்கப்போகும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் திறப்பு விழா மேடையை முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 29, 2026, 16:49 IST|Updated: Sep 29, 2026, 16:57 IST
joinshare
ஒரே ரயிலில் பிரதமர் மோடி-முதல்வர் விஜய்! எப்போ, எங்கு தெரியுமா?
Image Credit: Vijay and modi in Chennai | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய்யும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி நடக்கப்போகும் மெட்ரோ இரண்டாம் கட்ட திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மெட்ரோ பணிகள்..

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து, பூந்தமல்லி மற்றும் வடபழனி வரையிலான பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதை திறந்து வைப்பதற்காக முதல்வர் மோடி சென்னை வருகிறார்.

பூந்தமல்லி பைபாஸ் சாலை முதல், வடபழனி வரையிலான மெட்ரோ தொடர்வண்டி சேவை வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. மஞ்சள் லைனில் இயக்கப்பட இருக்கும் இந்த ரயில் சேவை மொத்தம் 14.6 கி.மீ தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மெட்ரோ பணிகள், தற்போது முடிவுபெற்று தொடங்க இருக்கிறது. சமீபத்தில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இவ்வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். .அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித்தன்மை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. பின்னர் இவ்வழித்தடத்தில் ரெயிலை இயக்குவதற்கான ஒப்புதலும் கிடைத்தது.

மேலும் படிக்க | உரங்களை அதிக விலைக்கு விற்பனை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

அனைத்து சோதனை ஓட்டங்களும் நிறைவடைந்து, ரயில் சேவை தொடங்க இருக்கிறது. பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரை செல்லும் மெட்ரோ ரயில் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. இதில், மொத்தம் 26 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்க இருக்கிறது. இதைத்தாண்டி,  மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் அதிக தூரத்தை கடக்கும் (118.9 கிலோ மீட்டர்) ரயில் சேவைகளுக்கான வேலைகளும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அங்கு சோதனை ஓட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்!

கடந்த பிப்ரவரி மாதமே, பூந்தமல்லி-வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில், பிரதமர் அலுவலகத்திற்கூ அனுப்பப்பட்ட நிகழ்ச்சி தேதிக்கான அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பணிகள் முடிந்த நிலையிலும் பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதில் கால தாமதம் நிலவியது.

வரும் அக்டோபர் 11 அன்று பூந்தமல்லி-வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில் அவர் சென்னி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

ஒரே ரயிலில் பயணிப்பார்களா?

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு, தமிழ்நாடு முதல்வர் விஜய், அவருடன் இணைந்து பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் அன்றைய நாளில்தான் இது குறித்த உறுதியான தகவல்கள் தெரிய வரும்.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai