SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விநாயகர் சுதுர்த்தி விடுமுறை.. ஊர் திரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு.. தமிழக அரசு அதிரடி!

Vinayagar Chaturthi Special Buses: தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து, ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 14, 2026, 09:22 IST | Updated: Sep 14, 2026, 09:35 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Vinayagar Chaturthi Special Buses: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (செப்டம்பர் 14) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களுடன் விநாயகர் சதுர்த்தி வந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் கூட்ட நெரிசலின்றி செல்வதற்காக, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்து, ஊருக்கு திரும்பும் பயணிகளுக்கு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று மட்டும் 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தொடர் விடுமுறை முடிந்து 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர். கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க -அலர்ட் பயணிகளே!

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 14.09.2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி- 255, மதுரை, திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50 நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்-225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து 305 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், 15.09.2026 அன்று 1,325 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, சேலம்-75, திருச்சி-105, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர்-200, நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10. கும்பகோணம்-125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 420) என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதலமைச்சர் தொகுதிக்கே இந்த நிலைமையா? 6 நாட்களாக போராட்டம்.. விஜய் இதை செய்திருக்கலாம்!

மாநகர சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் (Trip) இயக்கப்பட்டு வருகின்றன.

இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும் (Trip), 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் (Trip) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம். செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம். கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகள்..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 3 நாட்கள் விடுமுறை! தமிழக அரசின் குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES