SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

3 நாட்கள் விடுமுறை! தமிழக அரசின் குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Vinayagar Chaturthi Special Buses: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று (செப்டம்பர் 10) முதல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குசிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 10, 2026, 07:16 IST | Updated: Sep 10, 2026, 07:29 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Vinayagar Chaturthi Special Buses: தமிழகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வார இறுதி நாட்களுடன் விநாயகர் சதுர்த்தி வருவதால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செப்டம்பர் 10ஆம் தேதி (வியாழக்கிழமை), செப்டம்பர் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), செப்டம்பர் 12ஆம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), செப்டம்பர் 14ஆம் தேதி (விநாயகர் சதுர்த்தி) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழநாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 585 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

செப்டம்பர் 11ஆம் தேதி 1255 பேருந்துகளும், செப்டம்பர் 12 (சனிக்கிழமை) அன்று 1030 பேருந்துகளும், செப்டம்பர் 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 240 பேருந்துகளும், செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று 240  பேருந்துகளும், செப்டம்பர் 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 105 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் செப்டம்பர் 14 (திங்கட்கிழமை) அன்று 765 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 8666 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 32171 பயணிகளும், சனிக்கிழமை 18772 பயணிகளும், ஞாயிறு அன்று 11177 மற்றும் திங்கள் அன்று 23740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு ww-w.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES