SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னையில் பயங்கரம்.. விசிக பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக் கொலை - பகீர் பின்னணி

Chennai VCK Functionary Murder: சென்னையில விசிக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்விரோத காரணமாக விசிக நிர்வாகி கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Aug 29, 2026, 11:08 IST | Updated: Aug 29, 2026, 11:21 IST
Join

Chennai VCK Functionary Murder: தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கொலை சம்பவங்களை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பட்டப்பகலில் விசிக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசிக பிரமுகர் கொலை

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் விசிகி நிர்வாகி அன்பழகன்.  இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் பிரிவின் மாநில அமைப்பாளராக இருந்தார்.  இவரை ஆறு பேர் கொண்ட கும்பல் நேற்று பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்துள்ளது. 

நேற்று (ஆகஸ்ட் 29) காலை திமுக மண்டல அலுவலகம் அருகே திருநீர்மலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அன்பழகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தலைக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் மூன்று இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். 

அவர்கள் அன்பழகனை அரிவாள்களால் பலமுறை வெட்டிவிட்டு, அதிவேகமாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் அன்பழகனைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். 

சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அன்பழகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்பழகன் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்விரோதமே கொலைக்கான காரணமாக இருந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பேர் அதிரடி கைது

விசிக பிரமுகர் அன்பழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு முக்கிய கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் அன்பழகனை வீனஸ் என்பவர் தலைமையிலான கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2021 ஆம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் வீனசும் சிறையில் இருந்துள்ளனர்.  ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்த அன்பழகன் மற்றும் வீனஸ் இருவரும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து  குறுகிய காலத்தில் அன்பழகனின்  வளர்ச்சியை பார்த்து பொறாமை ஏற்பட்டுள்ளது.  வீனஸ்கும் அன்பழகனுக்கும் அவ்வபோது தொழில் போட்டிகள் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் வீனஸ் செய்து வரும் தொழில்களுக்கு அன்பழகன் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவரை கொலை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் நேற்றைய தினத்தில் வீனஸ் தலைமையிலான கூலிப்படையினர் அன்பழகனை திருநீர் மலையில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் வைத்து ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்  சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில்  வேறு யாராவது  தொடர்பில் இருந்தார்களா? என்கின்ற பல்வேறு கோணங்களில் சங்கர் நகர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES