Explained: இனி குடிநீர் பஞ்சம் இருக்காது! சென்னையில் ரூ.3,108 கோடியில் மெகா திட்டம்.. முழு விவரம்
Chennai Water Project Explained: சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான மெகா குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 14) அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டம் குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Chennai Water Project Explained: சென்னை குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என கூறப்படும் ரிங் மெயின் சிஸ்டம் திட்டத்திற்கு இன்று முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டிய நிலையில், இது எந்தளவுக்கு சென்னையின் குடிநீர் தேவைக்கு உதவும் என்பது குறித்தும், இதனின் பலன்கன் குறித்து பார்ப்போம்.
சென்னைக்கான நீராந்தரங்கள்
தலைநகர் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்குபவை சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் (நீர்த்தேக்கங்கள்) ஆகும். சென்னையின் குடிநீர்த் தேவையில் 60% முதல் 70% வரை இந்த ஏரிகளின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னையின் பிரதான குடிநீர் விநோயகத்திற்கு 5 முக்கிய ஏரிகள் உள்ளன. வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. சென்னையின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம்.
பூண்டி நீர்தேக்கம் கொற்றலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இது, சென்னையின் குடிநீர் தேவையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. மேலும், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை என 5 முக்கிய ஏரிகள் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது சென்னைக்கான குடிநீர் விநியோகமானது நீர் நிலைகள், நிலத்தடி நீர், கடல் நிரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் செய்யப்படுகிறது.
மேலும், மீஞ்சூர், நெம்மேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மொத்தம் 5 கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதோடு, ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 8 அமைப்புகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் பிரதான குழாய்கள் மூலம் மக்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பேரூரில் 400 MLD கொள்ளவு கொண்ட 4வது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்
நாளுக்கு நாள் சென்னை மாநகரம் வளர்ந்து வரும் நிலையில், குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், சீரான குடிநீர் விநியோகம் என்பது மிக முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், இந்த வருடன் எல் நினோ தாக்கத்தால் சென்னைக்கு மழை பெரிதாக பெய்யவில்லை. இதனால், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 33.74 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி-யில், இன்றைய நிலவரப்படி 3.967 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. மழை பொழிவு இல்லாமல், இப்படியாக சென்னை இருந்தால், அடுத்த வருடம் கண்டிப்பாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறி வருகின்றனர். இப்போதே பல பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பல ஆண்டுகளாக சென்னை வாசிகள் கூறி வருகின்றனர். சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
மெகா குடிநீர் திட்டம்
ரூ.3,108 கோடி மதிப்பில் சுற்றுநீர்க் குழாய்த் திட்டத்திற்கு அக்டோபர் 14ஆம் தேதியான இன்று முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் (CMWSSB) செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், நகரம் முழுவதும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதும், பற்றாக்குறை காலங்களில் நீர் வழங்குவது ஆகும். சென்னை நகரம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றியும் சமமாகவும் குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிசெய்யும் வகையில், 'ரிங் மெயின்' (Ring Main System) எனும் பிரம்மாண்ட வட்ட வடிவக் குழாய் இணைப்புத் திட்டத்திமாகும்.
நீர் மேலாண்மைத் துறையில் முன்னணியில் உள்ள 'விஏ டெக் வபாக்' (VA Tech Wabag) என்ற நிறுவனத்திடம் இத்திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் ஒப்படைத்துள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ADB) நிதியுதவியுடன் 98 கிலோமீட்டர் நீளத்திற்குப் பெரிய விட்டம் கொண்ட குழாய்கள் வட்டப் பாதையாக அமைக்கப்படவுள்ளன. இந்த வட்ட வடிவ முதன்மைக் குழாயிலிருந்து பிரியும் கிளைக் குழாய்கள் மூலம், சென்னையில் உள்ள 84 முக்கிய குடிநீர் விநியோக நிலையங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். வரும் 2057-ஆம் ஆண்டிற்குள் நாளைக்கு 1,762 மில்லியன் லிட்டர் நீரை கையாளும் வடிவமைக்கப்பட உள்ளது.
ரிங் மெயின் சிஸ்டம் என்றால் என்ன?
இதுவரை சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேரடி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு குழாயில் சிக்கல் ஏற்பட்டு, உடைந்தால் அது சார்ந்து இருக்கும் ஒட்மொத்த பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த நீர் அமைப்புகள் தனித்தனியாக செயல்படுகின்றன.
இதனால், நீராதாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், மற்றொரு நீராதாரத்தில் உள்ள நீரை தேவைப்படும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படும். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தான், ரிங் மெயின் சிஸ்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் சென்னையை சுற்றி வளையம் போல் ராட்சத குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதனுடன் அனைத்து நீர்த்தேக்கங்களும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களும் (Desalination Plant) இணைக்கப்படும்.
இதனால் மக்களுக்கு என்ன பயன்?
24 மணி நேர குடிநீர்: ஒரு ஏரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மற்றொரு ஏரி அல்லது கடல்நீர் நிலையத்தில் இருந்து வளையம் வழியாக தண்ணீர் வரும். இனி கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும்: இந்த வட்ட வடிவக் குழாய் அமைப்பில் எப்போதும் ஒரே சீரான நீர் அழுத்தம் (Pressurised network) பராமரிக்கப்படும். இதனால், குழாய்களில் ஏதேனும் விரிசல்களோ அல்லது கசிவுகளோ ஏற்பட்டாலும், வெளிப்புறக் கழிவுநீர் உள்ளே நுழைவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
பைப் உடைப்பு: ஒரு இடத்தில் குழாய் உடைந்தாலும், மறுபக்கம் வளையம் வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். எனவே, 2 அல்லது 3 நாட்களக்கு குடிநீர் நிறுத்தம் பிரச்னை இருக்காது.
50 லட்சம் பேருக்கு பலன்: 2035-ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1 கோடி மக்களுடன், புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் பலன் கிடைக்கும்.
குடிநீர் வீணாவதை தடுக்கலாம்: பழைய குழாய்களில் 20% தண்ணீர் கசிவால் வீணாகிறது. புதிய ரிங் மெயின் மூலம் கசிவு 5% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.