• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

Suryansh Shedge: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால், அவருக்கு பதில் இந்த இளம் வீரர் சூர்யான்ஷ் ஷெக்டேவை எடுக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written BySudharsan G
Published: Oct 14, 2026, 06:52 PM IST|Updated: Oct 14, 2026, 07:08 PM IST
joinshare
அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே
Image Credit: Suryansh Shedge | Image Source : Rediff

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

2

SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?

3

Explained: இனி குடிநீர் பஞ்சம் இருக்காது! சென்னையில் ரூ.3,108 கோடியில் மெகா திட்டம்.. முழு விவரம்

4

தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

5

PF தொகையை எடுக்கணுமா? எவ்வளவு எடுக்க முடியும்? EPFO அளித்த முக்கிய விளக்கம் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IND vs NZ, Suryansh Shedge: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர் வரும் அக். 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்பின் 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடைபெற இருக்கிறது. இறுதியாகவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கின்றன.

மேலும் படிக்க | ரிஷப் பண்ட் விலகல்... நியூசிலாந்து போகும் வேறு விக்கெட் கீப்பர் - என்னாச்சு?

கவலையளிக்கும் இந்திய பந்துவீச்சு

இதற்கிடையே இந்தியா ஏ - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தற்சமயம் இந்திய டி20ஐ ஸ்குவாட் மற்றும் இந்தியா ஏ ஸ்குவாட் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் ஓடிஐ ஸ்குவாட் அறிவிக்கப்பட இருக்கிறது.

2027 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் பெரியளவில் குறை இல்லை என்றாலும் பந்துவீச்சு கவலையளிக்கும் விதத்திலேயே உள்ளது. அதுவும் நியூசிலாந்து மண்ணில் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் ஒரு போட்டியை வெல்வது கூட கடினம் என்பதால் இந்திய வீரர்கள் தேர்வின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

எக்ஸ்ட்ரா வேகப்பந்துவீச்சாளர் யார்?

அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியா இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி மட்டுமே தற்போது அணியில் இருக்கிறார். சிவம் தூபே டி20 தொடரில் மட்டுமே விளையாடுகிறார். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் குறைந்தது 5 ஓவர்களை வீசியாக வேண்டும். ஹர்ஷித் ராணாவும் இல்லாத சூழலில் பேட்டிங்கும் நம்பர் 8 வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கவனம் ஈர்த்த சூர்யான்ஷ் ஷெக்டே

அந்த வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் மும்பை வீரர் சூர்யான்ஷ் ஷெக்டே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் சூர்யான்ஷ் ஷெக்டே கவனம் ஈர்க்கும் வகையில் விளையாடியிருந்தார்.

மேலும் படிக்க | நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், கடைசி போட்டியில் 66 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிரட்டும் அவரை நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்டில் நிதிஷ் குமாரின் தேவை

பிசிசிஐ தரப்பில் PTI ஊடகத்திடம் அளித்த தகவலில், "(நியூசிலாந்து) டெஸ்ட் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி நான்காவது வேகப்பந்துவீச்சாளராகவும், கீழ்வரிசையில் பேட்டராகவும் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருப்பதால், ஷெட்கே ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே, நிதிஷ் குமார் ரெட்டி டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் அவர் அனைத்து ஓடிஐ போட்டிகளில் விளையாட மாட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூர்யான்ஷ் ஷெக்டே இந்திய வொயிட் பால் அணியில் முக்கிய வீரராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே அவர் டி20ஐ போட்டிகளில் அறிமுகமாகி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டி20ஐ போட்டிகளில் விளையாடியிருந்தார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக உருவெடுப்பார்.

மேலும் படிக்க | NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team