• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?

SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்து, அவர்களிடம் இருந்து லெக் ஸ்பின்னரான ஷீஷன் அன்சாரியை பெற்றுள்ளது. இந்த டிரேட் விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 14, 2026, 06:13 PM IST|Updated: Oct 14, 2026, 06:22 PM IST
joinshare
SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?
Image Credit: T Natarajan, Zeeshan Ansari (L-R) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

2

SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?

3

Explained: இனி குடிநீர் பஞ்சம் இருக்காது! சென்னையில் ரூ.3,108 கோடியில் மெகா திட்டம்.. முழு விவரம்

4

தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

5

PF தொகையை எடுக்கணுமா? எவ்வளவு எடுக்க முடியும்? EPFO அளித்த முக்கிய விளக்கம் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IPL SRH - DC Trade: ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத டிரேட் டீலிங் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில் ஷீஷன் அன்சாரி எஸ்ஆர்ஹெச் அணியில் இருந்து டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். மேலும் நடரஜானின் ஐபிஎல் வருமானம் ரூ.5 கோடி ஆக குறைத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஷஷன் அன்சாரி அதே ரூ.40 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

தொகையை குறைத்துக்கொண்ட நடராஜன்

முன்னதாக, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடராஜனை விடுவித்தது. தொடர்ந்து, ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடராஜனை ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில், அவரது தொகை ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டாலும் அவர் மீண்டும் ஹைதராபாத் அணிக்கே திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.

2020ஆம் ஆண்டில் இருந்து நடராஜன் தொடர்ச்சியாக ஹைதராபாத் அணியில் விளையாடினார். 2020 - 2024 வரை எஸ்ஆர்ஹெச் அணிக்காக 55 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

🚨 News 🚨 T. Natarajan returns to @SunRisers, Zeeshan Ansari moves to @DelhiCapitals following a player trade between the two franchises. More details 🔽 | #TATAIPL https://t.co/1fXQ3GqWPp

— IndianPremierLeague (@IPL) October 14, 2026

SRH அணிக்கு பலம் சேர்க்கும் நடராஜன்

தற்போது அவர் திரும்புவதன் மூலம் ஹைதராபத் அணிக்கு பலம் கூடியிருக்கிறது. ஹைதராபாத் அணியின் டெத் பந்துவீச்சு மோசமாக இருந்த நிலையில், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் அந்த சிக்கலை தீர்த்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், லெக் ஸ்பின்னரான ஷீஷன் அன்சாரி ஐபிஎல் தொடரின் 2025 சீசனில் எஸ்ஆர்ஹெச் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

மேலும் படிக்க | 2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி குல்தீப் யாதவை டிரேட் செய்திருக்கும் நிலையில், அவருக்கு பதில் ஒரு ஸ்பின்னராக ஷீஷன் அன்சாரியை டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றிருக்கிறது. குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு கொடுத்து, மீண்டும் ரிஷப் பண்டை டெல்லி அணி பெற்றிருந்தது.

இந்த டிரேட் யாருக்கு லாபம்?

நடராஜனை ஏலத்திற்கு விட்டிருந்தால் சிஎஸ்கே போன்ற அணி அதிக தொகைக்கு கொத்தித் தூக்கியிருக்கும். ஆனால் டெல்லிக்கு நல்ல ஸ்பின்னர் கிடைக்காமல் போயிருக்கலாம். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிக தொகைக்கு நடராஜனை எடுக்க முடியாமலும் போயிருக்கலாம். குறைந்த விலையில் இரண்டு வீரர்களும் டிரேட் செய்யப்பட்டதன் மூலம் இது இரு அணிகளுக்கும் லாபமாகும்.

மொத்தமாக மாறிய டெல்லி அணி

டெல்லி அணியை பொறுத்தவரை JSW Sports, GMR Sports என இரண்டு உரிமையாளர்கள் 50:50 பங்கை வைத்துள்ளனர். இவர்களில் ஒவ்வொருவரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொறுப்பை சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வார்கள்.

அந்த வகையில், கடந்த 2025 மற்றும் 2026 சீசனில் GMR குழுமம் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது 2027 மற்றும் 2028 சீசனில் JSW குழுமம் பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் டெல்லி அணியே மொத்தமாக உருமாறியிருக்கிறது. ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்குள் வந்துள்ளார்.

சௌரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக நியமிகப்பட்டுள்ளார். உதவி பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடராஜனையும் டிரேட் செய்துவிட்டு ஸ்டார்கை முழுநேரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி அணியின் கேப்டன்ஸியிலும் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. அக்சர் படேலுக்கு பதில் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் கேப்டன்ஸியை பெற வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி... மும்பை இந்தியன்ஸ் எடுத்த நல்ல முடிவு

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL