Chennai Vadapalani Porur Metro Stations Update: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
சென்னையில் தற்போது மூன்று வழிகடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், அண்மையில் திறக்கப்பட்ட மஞ்சள் வடித்த இடத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் வடபழனி வரையும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியாக பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூந்தமல்லி வடபழனி இடியான மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 11 உயிர் மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெல்லியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு, வடபழனி என 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த வழித்தடங்களில் உள்ள 11 நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் என்று செல்கிறது. ஆனால் நீ வழித்தடத்தில் மொத்தம் 17 நிலையங்கள் உள்ளன. இதில் மீதமுள்ள ஆறு ரயில் நிலையங்களில் மெட்ரோபணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வடபழனி போர் இடையே உள்ள ஆலப்பாக்கம் சந்திப்பு, கரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய ஆறு நிலையங்களில் கட்டுமான பணிகள் முடிவடையாததால் அவை திறக்கப்படவில்லை.
மொத்தம் உள்ள 118.9 கிலோமீட்டர் ஈடம் கட்டத் திட்டத்தில் வழிதடம் நான்கு மற்றும் வழித்தடம் ஐந்தை நினைக்கும் இரட்டை அடுக்கு பாலத்தில் இந்த ஆறு நிலையங்களில் நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதனால் பணிகள் முடிவடைவதில் தாமதங்கள் ஏற்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில் கட்டுமானங்கள், முகப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன எனவும் அனைத்து பணிகளும் 2027 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில் சேவை தொடங்கிய பிறகு குறிப்பாக இரட்டை அடுக்கு பகுதியில் கட்டுமான பணிகள் வேகம் குறைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேற்கண்ட ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகள் முடிந்தாலும், மெட்ரோ ரயில்களை தானியங்கி முறையில் இயக்குவதற்கான சோதனைகளும், மெட்ரையில் பாதுகாப்பு ஆணையரின் அனுமதியும் கிடைத்த பிறகு நிலையங்கள் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Six metro stations between Vadapalani and Porur are likely to be ready by early 2027, but passenger services may begin only after June, as CMRL needs to complete automated train operation trials across the entire Vadapalani–Poonamallee Bypass stretch. https://t.co/NNF4xqyQks
— Chennai Updates (@UpdatesChennai) November 21, 2026
மேலும் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதும் அவசியம். ஆறு நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பானியர் ஆய்வு செய்வார். ஆனால் ரயில்கள் மேனுவல் முறையில் இயக்கப்படுவதை அவர் ஏற்க மாட்டார் என அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். தானியங்கி முறையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் ரயிலில் ஓட்டுநர் இருப்பார் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "2027 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ஓட்டுனர் இல்லாத முழு தானியங்கி முறையில் ரயில்கள் இயக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஜூன் மாதத்திற்குப் பிறகே இந்த 6 ரயில் நிலையங்களில் பயணிகள் சேவை தொடங்கும் " என தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில், மூடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை விரைவில் திறக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்திகின்றனர். இதன் மூலம் எங்களின் பயண நேரம் குறையும் என்றும் இதனால் ஆறுன ரயில் நிலையங்களை விரைவில் திறக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.