SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வடபழனி - போரூர்: 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் திறப்பு எப்போது? வெளியான முக்கிய அப்பேட்

Vadapalani Porur Metro Stations Update: வடபழனி - போரூர் இடையிலான ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களின் பணிகள் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், வடபழனி - பூந்தமல்லி பைபாஸ் முழு வழித்தடத்திலும் தானியங்கி ரயில் இயக்கச் சோதனைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிக்க வேண்டியுள்ளதால், ஜூன் மாதத்திற்குப் பிறகே இந்த நிலையங்களில் பயணிகள் சேவை தொடங்கும் எனத் தெரிகிறது.

Written By Umabarkavi K
Published: Nov 21, 2026, 14:19 IST | Updated: Nov 21, 2026, 14:32 IST
Join

Chennai Vadapalani Porur Metro Stations Update: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை

சென்னையில் தற்போது மூன்று வழிகடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, விம்கோ நகர்  முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், அண்மையில் திறக்கப்பட்ட மஞ்சள் வடித்த இடத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் வடபழனி வரையும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியாக பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூந்தமல்லி வடபழனி இடியான மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 11 உயிர் மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெல்லியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு, வடபழனி என 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.

மேலும் படிக்க; அடுத்த ரவுண்ட் ஆரம்பம்! நவ.23 முதல் மிக கனமழை.. வெதர்மேன் முக்கிய அலர்ட்

திறக்கப்படாத 6 மெட்ரோ ரயில் நிலையங்கள்

இந்த வழித்தடங்களில் உள்ள 11 நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் என்று செல்கிறது. ஆனால் நீ வழித்தடத்தில் மொத்தம் 17 நிலையங்கள் உள்ளன. இதில் மீதமுள்ள ஆறு ரயில் நிலையங்களில் மெட்ரோபணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வடபழனி போர் இடையே உள்ள ஆலப்பாக்கம் சந்திப்பு, கரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய ஆறு நிலையங்களில் கட்டுமான பணிகள் முடிவடையாததால் அவை திறக்கப்படவில்லை.

மொத்தம் உள்ள 118.9 கிலோமீட்டர் ஈடம் கட்டத் திட்டத்தில் வழிதடம் நான்கு மற்றும் வழித்தடம் ஐந்தை நினைக்கும் இரட்டை அடுக்கு பாலத்தில் இந்த ஆறு நிலையங்களில் நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதனால் பணிகள் முடிவடைவதில் தாமதங்கள் ஏற்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில் கட்டுமானங்கள், முகப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன எனவும் அனைத்து பணிகளும் 2027 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: சென்னை மெட்ரோ புதிய அறிவிப்பு! ரூ.466 கோடி செலவில் சூப்பர் திட்டம்..என்ன தெரியுமா?

அதிகாரிகள் சொல்வது என்ன?

ரயில் சேவை தொடங்கிய பிறகு குறிப்பாக இரட்டை அடுக்கு பகுதியில் கட்டுமான பணிகள் வேகம் குறைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேற்கண்ட ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகள் முடிந்தாலும், மெட்ரோ ரயில்களை தானியங்கி முறையில் இயக்குவதற்கான சோதனைகளும், மெட்ரையில் பாதுகாப்பு ஆணையரின் அனுமதியும் கிடைத்த பிறகு நிலையங்கள் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதும் அவசியம். ஆறு நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பானியர் ஆய்வு செய்வார். ஆனால் ரயில்கள் மேனுவல் முறையில் இயக்கப்படுவதை அவர் ஏற்க மாட்டார் என அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். தானியங்கி முறையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் ரயிலில் ஓட்டுநர் இருப்பார் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "2027 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ஓட்டுனர் இல்லாத முழு தானியங்கி முறையில் ரயில்கள் இயக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஜூன் மாதத்திற்குப் பிறகே இந்த 6 ரயில் நிலையங்களில் பயணிகள் சேவை தொடங்கும் " என தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில், மூடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை விரைவில் திறக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்திகின்றனர். இதன் மூலம் எங்களின் பயண நேரம் குறையும் என்றும் இதனால் ஆறுன ரயில் நிலையங்களை விரைவில் திறக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: சென்னை மக்களே உஷார்... நவம்பர் 21, 22 போக்குவரத்து மாற்றங்கள் - முழு விவரம் இதோ
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES