Coimbatore: கோவை மகளிருக்கு முக்கிய செய்தி. மகளிருக்கான இலவச தொழிற்பயிற்சி குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் 14.08.2010 அன்று நிறைவடைந்தது. எனினும், மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் தற்போது 31.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (28.8.2026) வெளியானது.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பின்வரும் காலியிடங்கள் உள்ளன:
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.750/- உதவித்தொகை, மிதிவண்டி, சீருடை தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள் மற்றும் 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மகளிருக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மகளிருக்கும் கூடுதலாக மாதம் ரூ. 1000/- வழங்கப்படுகிறது.
நவீன தொழில் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் வகையில் Industrial Visit In-plant Training மற்றும் Internship Training ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 100 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதுடன், பல்வேறு பன்னாட்டு நிறுவங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனால், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பயிற்சி முடித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000/- வரை மாத ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவியர்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தேர்வராகத் தேர்ச்சி பெற்றால், 10 ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவியர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். இதன் மூலம் சம்பாதித்துக் கொண்டே மேற்படிப்பையும் தொடரலாம்.
ஆகையால், தகுதியும் ஆர்வமும் உள்ள மகளிர் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, 31.08.2020 க்குள் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
9499055091, 9499055692