கோவை : மாணவர்களுக்கு விடுமுறை..சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கோவையில் சனிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published: Oct 24, 2026, 08:31 AM IST
| Updated: Oct 24, 2026, 08:45 AM IST
கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நாளில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மேற்கு மாவட்டமான கோவைக்கு சனிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. சனிக்கிழமையான இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனமழை பெய்து வருவதால், சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். அதோடு, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கோவை முதன்மை கல்வி அலுவலர் இது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்.