• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /கோவை : மாணவர்களுக்கு விடுமுறை..சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை : மாணவர்களுக்கு விடுமுறை..சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவையில் சனிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Written ByYuvashree M
Published: Oct 24, 2026, 08:31 AM IST|Updated: Oct 24, 2026, 10:32 AM IST
joinshare
கோவை : மாணவர்களுக்கு விடுமுறை..சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Image Credit: Coimbatore School leave | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஷாக்! 3 வருஷம் முடிஞ்சா கட்டாய இடமாறுதல் explained

3

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

4

பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

5

கள்ளக்குறிச்சி மக்களுக்கு குட்நியூஸ்! தரம் உயரும் அரசு மருத்துவமனை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நாளில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மேற்கு மாவட்டமான கோவைக்கு சனிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. சனிக்கிழமையான இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனமழை பெய்து வருவதால், சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். அதோடு, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கோவை முதன்மை கல்வி அலுவலர் இது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! குழந்தைகள் தினத்தில் கேக் கிடைக்கும்..தமிழக அரசு முடிவு

கோவை குற்றாலம் மூடல்!

வடகிழகு பருவமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிக்களின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டிருக்கிறது.

அதே போல, கனமழை காரணமாக பர்லியாறு பகுதியில் பேருந்து மீது மண் சரிவு ஏற்பட்டது. குன்னூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து மீது மண் சரிந்ததால், பேருந்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu