குழந்தைகள் தின விழா வர இருப்பதையடுத்து, இந்த நாளில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க 4 நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வரும் நவம்பர் 14ஆம் தேதி, குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தில், குழந்தைகளுக்கு அரசு சார்பில் கேக் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் ஒதுக்கீடு சமீபத்தில் செய்யப்பட்டிருக்கிறது.
1/5
குழந்தைகள் தினம்
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை, இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், பள்ளிகளில் பல்வேறு விழக்கள் நடப்பதுண்டு. தற்போது புதிதாக மாணவர்களை கவரும் ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற இருக்கும் குழந்தைகள் தின விழாவிற்காக, பள்ளி மாணவர்களூக்கு கேக் வழங்கப்பட இருக்கிறது. இதனால் மாணவர்கள் குஷியில் இருக்கின்றனர்.
2/5
கேக் டெண்டர் விநியோகம்
மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட இருக்கும் கேக்குகளை, கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான பணி ஆணைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், 4 நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறார்.
3/5
பிரிட்டானியா ந்னிறுவனம்
பிரிட்டானியா நிறுவனத்திடமிருந்து, 10 லட்சத்து 3 ஆயிரத்து 996 கேக்குகள் வழங்க, ஆர்டர் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 478.97 ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டூ, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேக்குகளை வினியோகம் செய்ய இருக்கின்றன.
4/5
ட்ரீம் கேக் டெண்டர்
அதே போல, ட்ரீம் கேக் நிறுவனத்திற்கு 33,87,459 கேக்குகளை வழங்க ஒப்ப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.3,84,13,785 ஆக இருக்கிறது. அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தேனி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்க இருக்கின்றன.
5/5
எலைட் நேச்சுரல்ஸ் டெண்டர்
ரூ.1,14,17,804 மதிப்பில், எலைட் நேச்சுரல் நிறுவனத்திற்கு கேக் டெண்டர் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்க இருக்கின்றன. அதே போல ஐடிசி நிறுவனத்துக்கு ரூ.1,07,71,498 மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேக்குகளை வழங்கும்.