ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 3 நாட்களுக்கு இந்த 2 ரயில்கள் தாமதமாகும்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
ஈரோடு ரயில்வே யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நவம்பர் 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்–டாடாநகர் மற்றும் ஆலப்புழா–தன்பாத் ஆகிய 2 விரைவு ரயில்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரோடு ரயில்வே யார்டில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்கள் நவம்பர் 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு ரயில்வே யார்டில் தண்டவாள இணைப்புகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வரும் நவம்பர் 25, 28 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களிலும் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 18190) நவம்பர் 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில், இந்த ரயில் வழித்தடத்தில் வசதியான இடத்தில் 30 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு (Regulated) தாமதமாக இயக்கப்படும்.
ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 13352) இதேபோல், நவம்பர் 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில், இந்த ரயில் வழித்தடத்தில் வசதியான இடத்தில் 15 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.
பயணிகள் இந்த ரயில் நேர மாற்றத்தை கவனத்தில் கொண்டு, தங்களின் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.