• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன், இது குறித்து தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Written ByR Balaji
Published: Nov 26, 2026, 20:11 IST|Updated: Nov 26, 2026, 20:14 IST
joinshare
கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

2

அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!

3

டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

4

வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

5

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சி தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார். சொத்து வரி, கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.  

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், கிணறு வெட்டக் கிளம்பிய பூதம் போல… தணிக்கை ஆய்வில் தோண்டத் தோண்ட திமுகவின் ஊழல் முகம் மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சித் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல்கள், கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டிற்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் மற்றுமொரு சான்றாக அமைந்திருக்கிறது.

அரசாணைப்படி சொத்து வரியை முறைப்படுத்தாததால் ரூ.1,194 கோடி இழப்பு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு முறையற்ற சொத்து வரி விதித்ததால் ரூ.87.17 கோடி இழப்பு, அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ரூ.274 கோடி இழப்பு, திடக்கழிவு மேலாண்மையில் மட்டும் ரூ.150 கோடி இழப்பு என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு விவரமும் அதிர்ச்சியளிக்கிறது.

இத்துடன், ஒப்பந்த விதிமீறல்கள், வட்டி வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்புகள், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் என முறைகேடுகளின் பட்டியல் நீள்கிறது.

கோவை மாநகராட்சியிலேயே ரூ.2,300 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு என்றால், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறைகளில் முறையாகத் தணிக்கை மேற்கொண்டால் இன்னும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்குமோ? எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் AI ஊழல் வரை அரங்கேற்றி மக்கள் வரிப்பணத்தினை ஏப்பம் விட்டது தான் சாதனையாக இருந்திருக்கிறது.

இந்த நிதி இழப்புகளுக்குப் பின்னால் உள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu