SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘ஓம்’ படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓம்’. இந்த படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

Written By Yuvashree M
Published: Nov 18, 2026, 17:56 IST | Updated: Nov 18, 2026, 18:06 IST
Image Credit: dhanush vijay | Source : Social Media
Join

‘ஓம்’ திரைப்படம், வரும் நவம்பர் 20ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

தனுஷ் அறிக்கை!

நடிகர் தனுஷ், தற்போது தான் நடித்துள்ள ‘ஓம்’ படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

“ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.
வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்”திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்!
அனைவருக்கும் அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | புது ஜேம்ஸ் பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் பற்றி ஊரே பேசுவது ஏன்? அவர் வெற்றி ஏன் இவ்ளோ ஸ்பெஷல்..?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES