• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /புது ஜேம்ஸ் பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் பற்றி ஊரே பேசுவது ஏன்? அவர் வெற்றி ஏன் இவ்ளோ ஸ்பெஷல்..?

புது ஜேம்ஸ் பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் பற்றி ஊரே பேசுவது ஏன்? அவர் வெற்றி ஏன் இவ்ளோ ஸ்பெஷல்..?

நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பற்றி ஊரே பேசி வருகிறது. ஏன் இவர் இவ்ளோ ஸ்பெஷல்? இதோ முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 18, 2026, 17:42 IST|Updated: Nov 18, 2026, 17:50 IST
joinshare
புது ஜேம்ஸ் பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் பற்றி ஊரே பேசுவது ஏன்? அவர் வெற்றி ஏன் இவ்ளோ ஸ்பெஷல்..?
Image Credit: Robert Pattinson | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

2

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

3

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

4

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

5

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஹாலிவுட் நடிகரான ராபர்ட் பேட்டின்சன்தான், புதிய ஜேம்ஸ் பாண்ட் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதிலிருந்து அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இவரைப்பற்றி ஏன் அனைவரும் பேசி வருகின்றனர்? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

புதிய ஜேம்ஸ்பாண்ட்:

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது. 1960களில் வெளிவர ஆரம்பித்த இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள், இப்போது வரை தொடர்ந்து வருகின்றன. இவரை 007 என்றும் கூறுவார்கள். இந்த கேரக்டரில் ஷான் கானெரி, டேவிட் நிவென், ராஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ரோஸ்னான் என பலர் நடித்துள்ளனர். கடைசியாக 2006 முதல் 2021ஆம் ஆண்டு வரை டேனியல் க்ரெயிக் நடித்து வந்தார். தற்போது புதிய ஜேம்ஸ்பாண்ட் ஆக ராபர்ட் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ட்வைலைட் ஹீரோ பட்டத்தை உடைக்க போராட்டம்..

ஹாலிவுட்டில் பிரபல ஆங்கில நடிகராக இருக்கிறார், ராபர்ட் பேட்டின்சன். இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளது. அதற்கு காரணம் ட்வைலைட் எனும் திரைப்படம்தான். இந்த படத்தில் அவர் வேம்பையர் ஆக நடித்திருப்பார். இப்படத்தில் அவர் நடித்ததற்காக பெண் ரசிகர் கூட்டத்தை பெற்றாலும் அவருக்கு அந்த படத்தில் அப்படியொரு கேரக்டரில் நடித்தது சங்கோஜமாக இருந்தது.

அந்த ஒரு படத்தில் நடித்ததை தன் வாழ்நாளில் செய்த மிகப்பெறிய தவறு என்று கருதிய ராபர்ட் பேட்டின்சன், அதை திருத்திக்கொள்ள வரிசையாக நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவருக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரமும் கிடைத்துள்ளது. 2028ஆம் ஆண்டு வெளியாகப்போகும் திரைப்படத்திற்கு பாண்ட் 26 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இவர்தான் ஹீரோ..

மேலும் படிக்க | இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்கள்! ஓம் to சத்தியவான் சாவித்ரி..முழு லிஸ்ட்

பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன்..!

ஒரே நடிகருக்கு, லெஜண்டரி கதாப்பாத்திரங்களாக கருதப்படும் பேட்மேன் கதாப்பாத்திரமும், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரமும் கிடைப்பது இதுவே முதன்முறை. ராபர்ட் பேட்டின்சன், பேட்மேன்/ப்ரூஸ் வெயின் கதாப்பாத்திரத்தில் 2022ஆம் ஆண்டில் வெளியான தி பேட்மேன்  படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2028ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் பேட்மேன் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட், பேட்மேன் இந்த இரு கதாப்பாத்திரங்களுக்குமே நிறைய ஆடிஷனும் உடல் உழைப்பும் தேவைப்படும். அதற்காக தன்னை மொத்தமாக மாற்றிக்கொண்ட ராபர்ட் பேட்டடின்சன், கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

ஹாலிவுட் நடிகர்களை பொருத்தவரை, அதில் இருக்கும் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்கள் கடின உழைப்பால் ஹாலிவுட்டிற்குள் வந்து பிரபலமானவர்களாக இருக்கின்றனர். ராபர்ட் பேட்டின்சன் அப்படிப்பட்ட ஒரு ஆள்தான். இவர், தன் இளமை காலத்தில் நடித்த படங்களின் கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக நினைத்து, இப்போது அதிலிருந்து மாறுபட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

குறிப்பாக, கிரிஸ்டோஃபர் நோலனுக்கு பிடித்த நடிகராக இருக்கும் இவர், அவர் இயக்கிய டெனட், தி ஓடிஸி, ட்யூன் பாகம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகர் புகழடையும் போது, அதற்காக அவர் உண்மையாக உழைத்திருக்கிறார் என்றால் அவருடைய ரசிகர்களுக்கு அது உண்மையாகவே மகிழ்ச்சியை காெடுக்கும். அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் தற்போது ராபர்ட் பேட்டின்சனுக்கும் நடந்துள்ளது.

மேலும் படிக்க | ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்தா..? கணவரை பிரிந்து வாழ்வது ஏன்? விளக்கம் இதோ

Add Zee News as a Preferred Source
TAGS:
Hollywood