• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘அரசன்’ படம் பொங்கலுக்கு வராது! ரசிகர்களுக்கு அதிர்ச்சி காெடுத்த சிம்பு..என்ன விவரம்?

‘அரசன்’ படம் பொங்கலுக்கு வராது! ரசிகர்களுக்கு அதிர்ச்சி காெடுத்த சிம்பு..என்ன விவரம்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம், அரசன். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சிம்பு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 04, 2026, 10:06 IST|Updated: Sep 04, 2026, 10:12 IST
joinshare
‘அரசன்’ படம் பொங்கலுக்கு வராது! ரசிகர்களுக்கு அதிர்ச்சி காெடுத்த சிம்பு..என்ன விவரம்?
Image Credit: Arasan | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விஜய் அரசியலுக்கும், அஜித் ரேஸிங்கிற்கும் சென்ற பிறகு தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் வருவது என்பதே கடினமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்தான், அரசன்.

‘அரசன்’ திரைப்படம்:

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு முதன்முறையாக நடிக்கும் திரைப்படம்தான், அரசன். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. பல வருடங்களுக்கு முன்பாக, தமிழ்நாட்டை கலக்கிய ஒரு கேங்ஸ்டரின் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதில் சிம்புவுடன் சேர்ந்து யோகலக்ஷ்மி, யோகி பாபு, விக்ராந்த், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வடசென்னை யுனிவர்ஸில் ஒரு படம்:

தமிழ் திரையுலகில், அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி கோலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம், வடசென்னை. தனுஷ், அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தையும் வெற்றிமாறனே இயக்கி இருந்தார். தற்போது உருவாகி வரும் அரசன் திரைப்படமும் இந்த யுனிவர்ஸில் ஒரு அங்கமாக இருக்கிறது. இதனால், அரசன் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

‘பொங்கலுக்கு வராது’

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களில், சிம்புவிற்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கும் இடையே இருந்த நிதி பிரச்சனை காரணமகா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், சில நாட்களில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு இரவு பலகலாக தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் வெகு விரைவில் இப்படம் முடிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களிடையே ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் நடிகர் சிம்பு.

#SilambarasanTR's update about #Arasan:

"Many are expecting that Arasan will be coming out for this Pongal 2027. But unfortunately it's not coming for Pongal. We didn't want to compromise on Quality. Neenga ellam perumai padara mari, #Arasan padam kandippa Sambavam pannum.… pic.twitter.com/vsOnud0Tze

— AmuthaBharathi (@CinemaWithAB) September 3, 2026

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, “நீங்க எல்லாரும் பொங்கலுக்கு அரசன் படம் வரும்னு எதிர்ப்பார்த்தீங்க..ஆனால் படம் பொங்கலுக்கு வராது” என கூறியிருக்கிறார்.

காரணம் என்ன?

பொங்கலுக்கு ஏன் படம் வராது என்பது குறித்த காரணத்தை தெரிவித்த நடிகர் சிம்பு, படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால், சில வேலைகளை டைட்டாக முடிக்க வேண்டியதாக இருக்கும், ஆனால் அதை செய்யாமல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லையென்றால் அது தவறாகி விடும். எனவே, கொஞ்சம் நேரமெடுத்து படத்தை இன்னும் நன்றாக எடுக்க இருக்கிறோம் என்று கூறினார்.

தீபாவளிக்கு சர்ப்ரைஸ்..

சிம்பு, தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகாது என்று கூறினாரே தவிர தீபாவளிக்கு வரப்போகும் ஒரு அறிவிப்பு குறித்தும் பேசி சர்பரைஸ் செய்தார். ”The World Of Arasan" க்ளிம்ஸ் தியேட்டரில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.  தான் முன்னாடி கூறியது போல, தன் படங்கள் மூலம் ரசிகர்களை பெருமைப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

சிம்புவின் அடுத்த படம்..

நடிகர் சிம்பு, அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது சிம்புவின் 51வது திரைப்படமாகும். தற்போது, அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு STR 51 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema