தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, நடிகை அம்பிகா நேரில் சென்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு கரண்ட் தவெக ஆட்சியை சாடி பேசி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தூய்மை பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பணி நிரந்தரத்தோடு, பேரு கால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களின் போராட்டம் நடைப்பெற்று வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியிலேயே, தூய்மை பணியாளர்கள் இது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு திமுக அரசு செவி சாய்க்காதது கடும் சர்ச்சையானதை அடுத்து, அப்போது தவெக கட்சியின் தலைவராக மட்டும் இருந்த விஜய், போராட்டக்காரர்களை தங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். ஆனால், இதே தவெக விஜய் தற்போது முதல்வர் விஜய்யாக மாறிய பின்னர், இன்னும் ஒரு முறை கூட போராட்டக்காரர்களை சந்திக்கவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
போராட்டம் சென்னையில் நடந்து வரும் நிலையில், நடிகை அம்பிகா போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அரசு குறித்த சில விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
போராட்டக்காரர்களிடம் முதலில் பேசிய அம்பிகா, அவர்களுக்கு வேண்டிய சம்பளம், பணி சீக்கிரமே கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். போன முறை ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டது குறித்து குறிப்பிட்ட அவர், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூய்மை பணியாளர்களை பார்த்தால் பாவமாகவும், பாசமாகவும் இருப்பதாக கூறிய அவர், தானும் தன் வீட்டிற்கு குப்பை எடுக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் உரையாற்றுவேன் என்றும், அனைவரும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தூய்மை பணியாளர்களை ‘தூய்மை தேவதைகள்’ என குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டி பேசிய நடிகை அம்பிகா, தூய்மை பையாளர்கலை தூய்மை தேவதைகள் என பெயர் சூட்டுவது மட்டும் முக்கியமல்ல என்றும், அந்த தேவதைகளின் கண்களில் இருந்து, ரத்தக்கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.
தொடர்ந்து கடந்த ஆட்சியில்தான் இவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், இந்த முறை ஆட்சி மாறியிருப்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், கண்டிப்பாக முதல்வர் அதற்கான வழிவகையை செய்வார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன், தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து பேசினார். அப்போது, அவர்களை இருமுறை அழைத்து விரிவாக பேசியதாகவும், அவர்களுக்கு போராட்டத்தை நடத்த ரிப்பன் மாளிகையில் இடம் கொடுத்ததாகவும் பேசினார். அவர்களுடன் பேசிய போது, பணியின் போது உயிரிழந்த நால்வருக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்து பேசிய அவர், இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டு வருவதாகவும், இது குறித்து முதல்வர் விஜய்யின் மேசையில் ஃபைல்கள் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.