• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘இப்படித்தான் ரக்ஷா பந்தன் கொண்டாடுவாங்களா?’ கிருத்தி சனோன் விளம்பரத்துக்கு தடை!

‘இப்படித்தான் ரக்ஷா பந்தன் கொண்டாடுவாங்களா?’ கிருத்தி சனோன் விளம்பரத்துக்கு தடை!

Kriti Sanon : பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர், கிருத்தி சனோன். இவர் சமீபத்தில் ஒரு பிரபல நகை விளம்பரத்தின் ரக்‌ஷா பந்தன் கான்செப்டை வைத்து வெளியான விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரம் தற்போது சர்ச்சையானதால் அது நீக்கப்பட்டுள்ளது.

Written ByYuvashree M
Published: Aug 27, 2026, 17:57 IST|Updated: Aug 27, 2026, 18:08 IST
joinshare
‘இப்படித்தான் ரக்ஷா பந்தன் கொண்டாடுவாங்களா?’ கிருத்தி சனோன் விளம்பரத்துக்கு தடை!
Image Credit: Kriti Sanon | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Kriti Sanon : பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர், கிருத்தி சனோன். இவர் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்தார். இதில், அவர் அணிந்திருந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த விளம்பர நிறுவனமே விளம்பரத்தை திரும்ப பெற்றுள்ளது.

ரக்‌ஷா பந்தனை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரம்!

பிரபல நடிகை கிருத்தி சனோன், ஒரு பிரபலமான நகைக்கடை விளம்பரத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். அதில், சகோதர பாசத்தை கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அது குறித்த ஒரு கான்செப்ட்தான் இதில் இடம் பெற்றிருக்கிறது. அந்த விளம்பரத்தில், கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை, பண்டிகையின் கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல எனவும், அவரது உடலின் கழுத்துப்பகுதி மிகவும் திறந்த நிலையில் இருக்கும் படியான ஒரு ஆடையை அணிந்து கொண்டு ரக்‌ஷா பந்தன் கொண்டாடுவது போல அதில் சித்தரிக்கப்பட்டிருப்பதாக பலரும் இது குறித்து பேசி வந்தனர்.

இந்த விளம்பரத்தில், கிருத்தி சனோனின் செல்லப்பிராணியான நாய்க்கும் அவர் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இது, பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயலாக இருப்பதாக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கிருத்தி சனோன் கொடுத்த பதில்!

கிருத்தி சனோனை அனைவரும் விமர்சித்து வந்ததை அடுத்து, அவர் அதற்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில், பாரம்பரியத்தின் மீது நாம் வைத்திருக்கும் உணர்வுகளில்தான் உள்ளது என்றும் கூறினார். மேலும், ஒரு பெண்ணின் கலாச்சார மரியாதையை அவரின் ஆடையின் கழுத்துப்பகுதியை வைத்தா தீர்மானிப்பது என்றும் கேட்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கங்கனா ரனாவத், கிருத்தி சனோனின் விளம்பரத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் ராகுல் காந்தி இவருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.

விளம்பர நிறுவனத்தின் அறிக்கை:

இந்த விளம்பரத்தின் நிறுவனம், தங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தை, அனைத்து ஊடகங்களில் இருந்து அந்த நிறுவனம் அகற்றி இருக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளின் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதை அடுத்து, குடும்பத்தினருடனும் செல்ல பிராணிகளுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதே தங்களின் நோக்கமாக இருந்ததாகவும், அது சில பிரிவினரின் மனதை அறியாமல் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி, அந்த விளம்பரத்தை வாபஸ் பெற்றது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema