அந்தரங்க சீன் லீக்..வீட்டை விட்டு வெளியவே வராத ராதிகா! அப்பறம் என்ன ஆச்சு?
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் கொடுத்திருந்த நேர்காணல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதில், தன்னுடைய அந்தரங்க காட்சிகள் வெளியான போது தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அவரே தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரின் 3வது சீசன் வெளியாகி இருக்கிறது. இதில், ராதிகா ஆப்தே மற்றும் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அவர்கள் இருவரும், ஒரு காட்சியில் ஆம்புலன்ஸிற்குள் உடலுறவு வைத்துக்கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த தொடர் வெளியான புதிதில் இந்த காட்சி பெரிதும் வைரலாகி விட்டது.
ராதிகா ஆப்தே, தன்னுடைய ஆபாச காட்சி லீக் ஆனது குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். அதில், அந்த காட்சிகள் லீக் ஆனதும் தன்னை சுற்றி இருப்பவர்களே அதை பார்த்த போது, தன்னால் வீட்டை விட்டு தலைக்காட்ட முடியாமல் தவித்ததாக கூறியிருக்கிறார்.
”நாம் அந்தரங்க காட்சிகளில் நடிப்பது குறித்து பேசுகிறோம். ஆனால், நான் நடித்த படத்தின் காட்சி ஒன்று, இணையத்தில் கசிந்த போது என்னால் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேவே வர முடியவில்லை. இது போன்ற விஷயங்கள் மிக விரைவாக தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்து விடும். யாராவது உங்கள் வீட்டின் வாசலுக்கு முன்பு நிற்க கூடும். அதனால், அந்தரங்க காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மன்னைக்கவ்விய டாக்ஸிக்..ஓடிடியில் ரிலீஸ்! எப்போ, எந்த தளத்தில் பார்க்கலாம்?
வீடியோவை பார்த்த ட்ரைவர்-செக்யூரிட்டி:
இந்த வீடியோ லீக் ஆன பிறகு, தன்னுடைய ஸ்டைலிஸ்ட் தன்னிடம் வந்து, அவருடைய ட்ரைவர் அந்த வீடியோவை வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதாகவும், நீங்கள் அவருடைய வீட்டிற்கு போறீங்களா என தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல, ராதிகாவின் வீட்டு செக்யூரிட்டியும் அதை பார்த்திருந்தாராம். இது போன்ற விஷயங்கள் தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள், இணைய வழியில் ஏற்படும் துன்புறுத்தலை தாண்டி, தன்னுடைய உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் என்று குறிப்பிடுகிறர். இதனால், தன்னுடைய ட்ரைவரையும் பாதுகாவரையும் அழைத்த அவர், “ஒரு வீடியோ கசிந்துள்ளது. நீங்கள் அதை பார்த்தீர்களா? இல்லையெனில் நானே உங்களுக்கு அனுப்புகிறேன். அதை பார்த்த பின்பு, உங்களுக்கு அதில் உடன்பாடு இருந்தால், என்னுடன் வேலை செய்யலாம், இல்லையென்றால் இப்போது சம்பலத்தை வாங்கிக்கொண்டு கிளம்பலாம்” என்றிருக்கிறார். உடனே அவர்கள் தன்னை பாதுகாப்பதாக கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்..
நடிகை ராதிகா ஆப்தே, இந்திய சினிமாவில் தைரியமான சில ரோல்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்களுள் ஒருவராக இருக்கிறார். இந்திய மொழி படங்கள் மட்டுமல்லாது சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஒரு பக்கம் படம், ஒரு பக்கம் குடும்பம், குழந்தை, இன்னொரு பக்கம் தன்னை சுற்றி வரும் சர்ச்சைகளை கையாளுவது என்று இருக்கிறார்.
ராதிகா ஆப்தே தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதிலும், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்கள் இவருக்கு புகழை தேடி தந்தது.
லஸ்ட் ஸ்டோரீஸ் 3 திரைப்படத்தில், ராதிகா ஆப்தே அம்ட்டுமல, சித்தார்த், அதிதி, ராதிகா மதன், அபிஷேக் பானர்ஜீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | Dhanush : “நீங்க எப்போ அரசியலுக்கு வர்றீங்க?” கேள்விக்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!