பான் இந்திய அளவில், பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் டாக்ஸிக். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
யாஷ் நடித்திருக்கும் டாக்ஸிக் திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி இருந்தார். யாஷ் உடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வில்லனாக இன்னொரு கதாப்பாத்திரத்தில் யாஷே நடித்துள்ளார். கேஜிஃஎப் வெற்றிக்கு பிறகு அந்த தோற்றத்தில் இருந்து சற்று வேறுபட்டு, டாக்ஸிக் படத்தில் அவர் தோன்ற நினைத்தாலும், ரசிகர்கள் அவரை இந்த படத்திலும் அதே கேஜிஎஃப் யாஷ் ஆகத்தான் பார்த்தனர்.
பொதுவாக எந்த படம் ரிலீஸ் ஆகும் போதும், அதற்கு இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது அதனை ஈடு செய்ய முடியவில்லை என்றால், கண்டிப்பாக அது பேக் ஃபயர் ஆகும். அதுதான், டாக்ஸிக் திரைப்படத்திற்கும் நடந்தது. டீசர், டிரைலர் என்று அனைத்திலும் படத்தின் ஒரு சில நல்ல காட்சிகளை மட்டும் எடிட் செய்து விட்டு, படத்தில் அனைவரையும் ஏமாற்றி விட்டதாக படம் பார்த்தவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
படத்தில், நடிகைகளை சும்மா காட்சி பொருளாக வைத்திருப்பதாகவும், இதை கீது மோகன்தாஸ் போன்ற இயக்குநரிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. காரணம் அவர் ஏற்கனவே மூத்தோன், ஆர் யூ லிசனிங்? பாேன்ற விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற நல்ல படங்களை இயக்கியதால் இவர் மீது ரசிகர்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.
போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில், அபினே வர்த்தக ராஜ்ஜியத்தை உருவாக்கும் ராயா எனும் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தை சுற்றிதான் கதை நிகழும். இவருக்கு சகோதரியாக ‘கங்கா’ எனும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். காதலியாக கியாரா அத்வானி நடித்திருந்தர். இன்னொரு காதலியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ், பல கோடி செலவில் உருவான இந்த படம், சுமார் ரூ.350 கோடி வசூல் செய்தது. ரவி பஸ்ரூர் இசையமைத்த இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தது.
டாக்ஸிக் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை தற்போது ஓடிடியிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில், டாக்ஸிக் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தியேட்டரில் இந்த படத்தை மிஸ் செய்தவர்கள், ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
யாஷ், அடுத்ததாக ராமாயண படத்தில் ராவணனாக நடிக்கிறார். இதற்கடுத்து, கேஜிஎஃப் 3 படத்தின் பணிகள தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.