• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /Dhanush : “நீங்க எப்போ அரசியலுக்கு வர்றீங்க?” கேள்விக்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!

Dhanush : “நீங்க எப்போ அரசியலுக்கு வர்றீங்க?” கேள்விக்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!

சமீப காலமாக நடிகர் தனுஷ், அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு அவரே ரியாக்ட் செய்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 24, 2026, 10:36 IST|Updated: Sep 24, 2026, 10:37 IST
joinshare
Dhanush : “நீங்க எப்போ அரசியலுக்கு வர்றீங்க?” கேள்விக்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!
Image Credit: Dhanush political entry Reaction | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முதல்வர் விஜய், சினிமாவில் இருந்த ‘உச்ச நட்சத்திம்’ என்றிருந்த பதவியை விட்டு விட்டு, அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். அது அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்ததோடு, இப்போது முதல்வர் ஆகவும் மாறிவிட்டார். அவருடைய ரூட்டை பின்தொடர்ந்து, இன்னும் சில நடிகர்களும் கூட தவெகவில் இணைந்தனர். இந்த சமயத்தில்தான், தனுஷும் அரசியலுக்கு வருகிறாரா என்கிற பேச்சு எழுந்தது.

தனுஷ்-அரசியல் சார்ந்த பேச்சு:

முதல்வர் விஜய், அரசிலுக்கு வரும் முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என மாற்றினார். இதன் மூலம் இவருடைய ரசிகர்கள் மக்களுக்கு சேவைகளை வழங்க ஆரம்பித்தனர். இந்த மன்றத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றனர். பின்பு, அதுவே நாளடைவில் அவர் அரசியல் கட்சியை தொடங்க அடித்தளமாக ஆயிற்று. அப்படி, நடிகர் தனுஷும் சில வேலைகளை செய்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக, நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பாக அவருடைய பிறந்தநாளையொட்டி விழா நடத்தப்பட்டது. இதற்கு முன்பாகவே அவருடைய ரசிகர் மன்றத்தில் ஒரு கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவில் நடிகர் தனுஷ் பேசிய விஷயங்களும் அரசியல் எண்ட்ரிக்கு ஹிண்ட் கொடுப்பது போல இருப்பதாக கூறி வந்தனர்.

மேலும் படிக்க | உள்ளாடையுடன் நடிக்க..ராதிகா ஆப்தேவை கட்டாயப்படுத்திய படக்குழு! பகீர் சம்பவம்..

ஒரே வருடத்தில் இரண்டு தேசிய விருது!

நடிகர் தனுஷுக்கு 72வது தேசிய திரைப்பட விருதுகளில், இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. ஒன்று, அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம், சிறப்பு பிரிவில் தேர்வாகி வெற்றி பெற்றது. அதே போல, ராயன் திரைப்படத்திற்காக தனுஷ் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றார். இதற்கு முன்னரும் தனுஷ் ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார். இப்போதும் அவருக்கு இந்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது சர்ச்சையானது. இது குறித்து அந்த விழாவில் பேசிய தனுஷ், தனக்கு தன்னுடைய ஆரம்ப காலக்கட்டங்களிலும், 3 போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காத போதும் அது குறித்து எதுவுமே பேசாதவர்கள், இப்போது தனக்கு விருது கிடைக்கும் போது மட்டும் ஏன் கிடைத்தது? என்று கேள்வி கேட்பதாக கூறினார்.

சமீபத்தில் 72வது தேசிய விருதுகள் விழா நடந்து முடிந்தது. அதில் கலந்து கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய தனுஷிடம் அரசியல் என்ட்ரி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்தான் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்..

தனுஷிடம், பத்திரிகையாளர் ஒருவர் “அரசியலுக்கு வருவது எப்போது?” என்று கேட்க, அதற்கு தனுஷ், “ஹாஹாஹா…” என ரஜினி ஸ்டைலில் சிரித்து விட்டு காருக்குள் ஏறிவிட்டார். அந்த கேள்விக்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் இப்படி சிரித்து விட்டு காருக்குள் ஏறி இருப்பது இது குறித்த சந்தேகத்தை மேலும் கிளப்பி இருக்கிறது.

ஓம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம்தான், ‘ஓம்’. இந்த படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், அதே தேதியில் ஜெயிலர் 2 படமும் வெளியாகிறது. இதையடுத்து, ஓம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது. புது ரிலீஸ் தேதி என்ன என்பதை பின்னர் அறிவிப்போம் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | குழந்தை பிறப்பிற்கு பின்..பாடி ஷேமிங் செய்யப்பட்ட நடிகைகள்! ஐஸ்வர்யா to கத்ரீனா..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema