43 வயதிலும்..சிங்கிளாக இருப்பது ஏன்? ‘பொல்லாதவன்’ ரம்யா சொன்ன நச் பதில்!
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர், நடிகை ரம்யா. இவர், திருமணம் குறித்த தன்னுடைய கருத்தை சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களின் மூலம் மிகவும் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், ரம்யா. இவர், திருமணம் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணமும்..நடிகைகளும்..!
சினிமாவில் இருக்கும் பல நடிகைகள், பெரும்பாலும் தங்கள் திருமணத்தை 30களுக்கு மேல்தான் செய்து கொள்வர். அப்படி திருமணம் செய்து கொண்ட பின்னர் ஒரு சிலர்தான் சினிமாவில் தொடர்ந்து நடிக்கின்றனர். அப்படி நடிப்பவர்களுக்கும் சக்ஸஸ் ரேட் என்பது குறைவாகவே இருக்கிறது. இதை தவிர்க்கவும், தனக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாமலும் ஒரு சில நடிகைகள் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். நடிகர் ரம்யாவும் அப்படிப்பட்ட நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்.
திருமணம் பற்றிய ரம்யாவின் நிலைபாடு!
சமீபத்தில், நடிகை ரம்யா பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவரிடம் அவருடைய திருமணம் மீதான நிலைபாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“திருமணம் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா? கண்டிப்பாக இல்லை. திருமணம் என்பது நான் யார் என்பதை யாருக்கும் நிரூபிக்காது. நாம் திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், இல்லையா? மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ரொம்ப முக்கியம். நாம் ஒன்று திருமணம் செய்து கொள்ள வேண்டும், அல்லது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ரம்யா கூறியிருக்கிறார்.
ரம்யாவின் பதிலில் இருந்து அவருக்கு திருமணம் பற்றிய ஐடியாவே இல்லை என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டனர்.
ரம்யாவின், திருமணம் பற்றிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக, திருமணம் குறித்த விவாதங்களில், திருமணம்தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் வேலையில், அதை தகர்த்தெறியும் வகையில் அவர் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
நட்புதான் முக்கியம்!
ரம்யா, தன்னுடைய கருத்து அனைவருக்கும் பொருந்தாது என்று கூறியதோடு, தன்னை பொறுத்தவரை திருமணத்திற்கு இரண்டு பேர் நல்ல நட்போடு இருப்பதுதான் அடித்தளம் என்று கூறியிருக்கிறார். அதே போல ஒருவருக்கொருவர் நல்ல புரிதலும் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
”ஒரு மனிதராக நாம் நிறைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவராக இருக்கிறோம். அங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நண்பர்களாக இருந்து, நல்ல கருத்துகளை இருவரும் பெசுபவராக இருக்கும் போது திருமணம் செய்து கொள்வது நல்ல ஐடியா” என்று கூறியிருக்கிறார். ஒரு நல்ல உறவிற்கு, புரிந்துணர்வும், நட்பும்தான் காரணம் என ரம்யா தெரிவித்திருக்கிறார்.
இன்னும் நல்ல பார்ட்னர் கிடைக்கவில்லை!
ரம்யா, அடிக்கடி தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கும் பதிலளித்திருக்கிறார். தன்னிடம் எப்போ கல்யாணம் என அனைவரும் கேட்டு வருவதாகவும், அவர் தனக்கான பார்ட்னரை இன்னும் பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய கவனம் அதில் இல்லை என்றும், தான் இப்போது பிசியாக வேலை பார்த்து வருவதாகவும் கூறியிருக்கிறார். ஒரு உறவு அமைய, நேரமெடுக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | போலீஸாக மாஸ் காட்டும் சூர்யா..47வது படத்தின் டைட்டில் ‘சீன்’! வெளியான டீசர்