தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக விளங்குபவர் சமந்தா. சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி வந்த அவர், சமீபத்தில் பெரிய ஹிட் கொடுத்து கம்–பேக் கொடுத்திருக்கிறார். தற்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவை பற்றி இங்கு பார்ப்போம்.
சமந்தா:
நடிகை சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திரையுலகிற்கு வந்தவர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்கிய சமந்தா, நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதோடு, அவருடைய பல படங்கள் ஃப்லாப் ஆனது. கெரியரில் பின்வாங்கிய நிலையில் இருந்த சமந்தா, பின்பு தான் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக தெரிவித்தார்.
நடிகை சமந்தா, சினமாவில் இருந்து பிரேக் எடுத்தாரே தவிர சமூக வலைதளங்களில் ஓரளவிற்கு ஆக்டிவாகத்தான் இருந்தார். அடிக்கடி தன்னுடைய நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று இருந்தார். இப்படியே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சென்ற நிலையில் பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்தார், வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை ஆரம்பித்தார், தயாரிப்பாளராகவும் மாறினார். இவர் தயாரிப்பில் உருவான சுபம் எனும் படம் ஓரளவிற்கு ஹிட் ஆனது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா, மீண்டும் சினிமாவிற்கு வந்தது ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் மூலமாகத்தான். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கி இருந்தார். இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அவதரித்த சமந்தா, பல சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தார். தொடர்ந்து, இப்படம் சுமார் ரூ.100 கோடி வரை வசூலை பெற்றது. இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.
மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சமந்தா, தான் கர்ப்பமாக இருக்கும் விவரத்தை அறிவித்தார். இதனால் ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிப்பேன் என கூறிய அவர், தற்போது தன்னுடைய கர்ப்ப காலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா, தன்னுடைய கர்ப்ப காலத்தில் சுமார் 11 கிலோ ஏறி இருப்பதாக சமீபத்திய பதிவில் தெரிவித்திருக்கிறார். மேலும், தாய்மை பயணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருக்கும் அவர், இது தனக்கு புதிய தன்னம்பிக்கையை கொடுப்பதாகவும், பலத்தை கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த பதிவுகளில், ஒரு ரசிகர் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என கேட்டார். அதற்கு சமந்தா, குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது, நினைத்ததை விட கடினமாக இருப்பதாகவும் நல்ல பெயர்களை பரிந்துரை செய்யுங்கள் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு ஒரு ரசிகர் கமெண்ட் செய்திருந்தார். அதில், சமந்தா மற்றும் ராஜ் இருவரின் பெயரையும் சேர்த்து அவர் இரண்டு பெயர்களை பரிந்துரைத்தார். பெண் குழந்தையாக இருந்தால், Samaira மற்றும் பெண் குழந்தையாக இருந்தால் Samaraj என்று வைக்கலாமே என கூறினார். மேலும், சாம் மற்றும் ராஜ் இருவரின் பெயருக்கும் சரியாக பொருந்தும் பெயர் இது என தெரிவித்திருந்தார். இதற்கு சமந்தா ஒரு பதிலை அளித்திருந்தார். அப்போது, “சமராஜ் என்பது நம்மை பற்றியே அதிகம் பெருமை பேசிக்கொள்வது போல இல்லையா?” என்று பதில் கூறினார். இந்த பதிவு குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.