அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..
அனிருத்தின் திருமணம் குறித்து, 10 வருடங்களுக்கு முன்பு கூறிய விஷயம், அப்படியே பலிப்பதாக கூறி, ஒரு வீடியோ இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவருக்கும், பிரபல தொழிலதிபரும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யாவிற்கும் திருமணம் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், அனிருத்தின் திருமணம் குறித்து 10 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத்-காவ்யா மாறன் திருமணம்!
தன்னுடைய டீன்-ஏஜ் வயதிலேயே, 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உறவினர் முறை சகோதரரான இவர், ‘Why This Kolaveri’ பாடல் மூலம் ஹிட் இசையமைப்பாளராக மாறினார். இதைத்தொடர்ந்து, அவர் மெட்டு போட்ட திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.
அனிருத்திற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், விஜய், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்த அனிருத், இப்போது டாப் ஸ்டார்கள் படங்களுக்கு இசையமைக்கும் ராக் ஸ்டாராக இருக்கிறார்.
சமீப காலமாக, தமிழ் படங்களில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராக மாறி வருகிறார். இந்த சமயத்தில், அவருக்கு திருமணம் நடக்க இருக்கும் தகவலும் அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி, கிரீஸில் திருமணம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பல வருட காதல்?
அனிருத்தை சுற்றி, சில சமயங்களில் கிசுகிசுக்கள் பரவி வந்தது. எப்போது, சுச்சி லீக்ஸில் ஆண்ட்ரியாவுடனான முத்த போட்டோ வெளியானதை தொடர்ந்து, இவர்களின் காதலும் உறுதியானது. ஆனால், இந்த உறவு சில மாதங்களிலேயே பிரேக்-அப்பில் முடிந்தது.
இதையடுத்து, பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் அனிருத்திற்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது திருமணமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருமணம் எப்போது? எங்கே?
அனிருத் காவ்யா மாறன் திருமணம், க்ரீஸ் நாட்டில் வரும் நவம்பர் 11ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி பெரிய அளவில் திருமண வரவேற்பு நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அன்றே கணிக்கப்பட்டது..
அனிருத், திரையுலகிற்கு வந்த புதிதில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படியிருப்பார் என அதிக் கணிக்கப்பட்டிருந்தது. சீட்டுக்கட்டை வைத்து அவரது எதிர்காலத்தை கணித்திருந்தனர்.
தொகுப்பாளர், “அனிருத்துக்கு எத்தனையாவது கேர்ள் ஃப்ரெண்ட் கல்யாணத்தில் இணைவார்?” என்று கேட்க, அதற்கு கணிப்பாளர், அனிருத், தன் தந்தை எந்த பெண்ணை ஓகே என சொல்கிறாரோ அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்றும், அனிருத்துக்கு லவ் மேரேஜ்தான் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
”அனிருத்தின் மனைவி திரைத்துறையில் இருப்பார்களா?” என்று கேட்க, அதற்கு அவர் “இல்லை, கண்டிப்பாக ஒரு தொழிலதிபராக இருப்பார்” என்று கூறினார்.
அந்த பெண், எந்த ஊரில் இருப்பார் என்று கேட்க, அதற்கு அவர், அனிருத் வீடு இருக்கும் இடத்தை சுற்றிதான் இருப்பார் என்றும், சென்னையை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்தார்.
அனிருத், ஒரு பார்டியில் அந்த பெண்ணை சந்திப்பார் என்று அவர் தெரிவித்திருந்தார்.