உலகவில் பல கோடி ரசிகர்களை கொண்ட படமாக இருக்கிறது, மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள். இதையடுத்து, வரும் டிசம்பர் 17ஆம் தேதி, அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அதற்கு முன்பாகவே இன்னாெரு மெகாஹிட் மார்வல் படமும் வெளியாகிறது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமா நிகழ்வுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்கள் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் எனப் பல சிறப்பம்சங்களுடன் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் உருவாகியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான கதை சொல்லல் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கத் தயாராகி வருகிறது.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
அவெஞ்சர்ஸ் படத்தில், முக்கிய ஹீரோக்களுள் ஒருவராக இருக்கிறார், ஸ்பைடர்மேன். இந்த மார்வல் யுனிவர்ஸில் ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்தில் டாம் ஹோலாண்ட் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கேப்டன் அமெரிக்கா:சிவில் வார் திரைப்படத்தில் ஸ்பைடர் மேனாக அறிமுகமானார். இதன் பிறகு, அவருக்கென்று நான்கு தனி படங்கள் வெளிவந்து விட்டன. ஸ்பைடர் மேன் ஹாேம்கம்மிங், ஃபார் அவே ஃப்ரம் ஹோம், நோ வே ஹோம் மற்றும் கடைசியாக பிராண்ட் நியூ டே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிராண்ட் நியூ டே திரைப்படம், கடந்த ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து, இந்த படம் உலகவில் பெரும் வெற்றி பெற்ற மார்வல் படங்களுள் ஒன்றாக இருந்தது. அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் சமயத்தில், பிராண்ட் நியூ டே திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிராண்ட் நியூ டே திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதில் குறிப்பாக, எக்ஸ்டண்டட் கட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில், யாரும் எதிர்பார்க்காத புதிய கதாப்பாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்தை மீண்டும் தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.