'ஹனுமான்' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் 'சூப்பர் ஹீரோ'வாக உருவெடுத்துள்ள இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
‘ஹனுமான்' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் இன்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து, இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
ஹனுமன் திரைப்படம் மூலம் பிரபலமான தேஜா
'ஹனுமான்' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் 'சூப்பர் ஹீரோ'வாக உருவெடுத்துள்ள இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. மணப்பெண்ணான மவுரியா, அமெரிக்காவில் மென்பொருள் பணியாளராக இருப்பதாக கூறப்படுகிறது.
2/5
வாழ்த்திய முக்கிய அரசியல் தலைவர்கள்
இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்து முடிந்தது.
3/5
சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் வாழ்த்து
நிகழ்வில் 'மெகாஸ்டார்' சிரஞ்சீவி, மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தெலுங்கானா திரைப்பட துறை அமைச்சர் திரு. கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் சீதக்கா, முன்னாள் அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
4/5
மணமக்களை வாழ்த்திய திரையுலகம்
தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து மணமக்களுக்கு தங்களது ஆசிகளை வழங்கியது. இவ்விழாவில் பழம்பெரும் இயக்குநர் கே. ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, தில் ராஜு, டி.ஜி. விஸ்வ பிரசாத், சுஷ்மிதா கொனிடேலா, சாஹு கரபதி, வெங்கட் போயனப்பள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.
5/5
டிசம்பரில் திருமணம்
இந்த இனிய தருணத்தின் மூலம் தேஜா சஜ்ஜா மற்றும் மௌரியா தங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' (Destination Wedding) ஆக நடைபெறவுள்ளது.