பிக்பாஸ் 10 : 3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைலட் கார்ட் என்ட்ரி! யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த சமயத்தில், இந்நிகழ்ச்சியில் புதிதாக வைல்ட் கார்ட் மூலமாக இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையுலகில் முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை, 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்ததையடுத்து, தற்போது நடிகர் விஜய் சேதுபதி 8,9,10 ஆகிய சீசன்களின் தொகுப்பாளராக இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தொடங்கியது.
பிக்பாஸ் சீசன் 10:
பிக்பாஸ் 10ஆவது சீசன், கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. இதில், லக்ஷ்மி பிரியா, குமரன், சாந்தினி, சாத்திகா, வினோத் பாபு உள்ளிட்ட பலர் இதில் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கினர்.
எப்போதும் போல இல்லாமல், இந்த பிக்பாஸில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே போட்டி தொடங்கி விட்டது. மூன்று மூன்று பேராக போட்டியாளர்களை மேடையில் நிற்க வைத்து, அந்த மூன்று பேரையும் அங்கிருக்கும் ஆடியன்ஸிடம் பிரச்சாரம் செய்ய வைத்து, அதில் ஓட்டு போட வைத்து, குறைவான வாக்குகளை பெற்றவர்களை வெளியேற்றினர். இப்படித்தான், இப்போது நிகழ்ச்சிக்குள் இருக்கும் போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
மேலும் படிக்க | சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!
3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில், இந்த வாரம் 3 பேர் எவிக்ட் ஆக இருக்கின்றனர். அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற கெஸ்ஸிங் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க 3 பேர் வைல்ட் கார்டில் உள்நுழைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார், என்பது, இன்றிரவு 8 மணிக்கு மேல் தெரிந்து விடும். மூன்று மணி நேரம், இந்த ஷோ நடக்கப்போவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து, சவின்யா, ஜாவித் உள்ளிட்டோர் வெளியேறுவதாக கூறப்படுகிறது. அந்த ஒருவர் யார் என்பது குறித்தும், எவிக்ட் செய்யப்படுவதாக மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் வெளியேறுகிறார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், பிக்பாஸ் 10 வீட்டிற்குள் நுழைபவர்கள் யார் யார் என்பது குறித்த தகவலும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் போட்டி தொடங்கும் முன்பு, மேடையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட அக்ஷிதா, மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் உள்நுழைவதாக கூறப்படுகிறது. இவர், தற்போதைய போட்டியாளர் அவினாஷின் தங்கை ஆவார். பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக, அண்ணனும் தங்கையும் ஒரே பிக்பாஸ் சீசனில் விளையாடப்போவது இதுவே முதன்முறையாகும்.
இன்னொரு முக்கிய போட்டியாளராக பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதாக கூறப்படுகிறது. இவர், ஐபிஎல் எனும் படத்தில் கடந்த வருடத்தில் நடித்திருந்தார். அது மட்டும் கிடையாது, இவர் மீது எக்கச்சக்க வழக்குகளும் இருக்கிறது. இதனால் போலீஸாரும் அவரை அடிக்கடி கைது செய்தனர். இவர் பிக்பாஸிற்கு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத்தாண்டி, அடுத்ததாக இந்த வீட்டிற்குள் நுழையும் ஆள் யார் என்பது மர்மமாக இருக்கிறது.
மேலும் படிக்க | மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு