• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!

சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

Written ByYuvashree M
Published: Oct 02, 2026, 06:33 PM IST|Updated: Oct 02, 2026, 06:40 PM IST
joinshare
சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!
Image Credit: Sigma Release | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained

வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained

2

சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!

3

Explained : 5 முறை நாமினேட் செய்தும்..மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

4

ரயில் பயணிகளே உஷார்.. கோவை சந்திப்பில் 6 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது!

5

பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

படக்குழுவினர் பேச்சு!

நடிகை மகாலக்‌ஷ்மி, " இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை". கலை இயக்குநர் பெஞ்சமின், "சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி".

நடிகர் அன்புதாசன், " இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி".

மேலும் படிக்க | ‘சிக்மா’ படம் எப்படியிருக்கு? ரசிகர்கள் கருத்துகள் என்ன? X விமர்சனம்..

வில்லனாக நடித்தவர் சொன்னது..

நடிகர் ஷிவ் பண்டிட், "கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய உழைப்பிற்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனத்திற்கு நன்றி".

நடிகை ஃபரியா அப்துல்லா, "ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்".

லைகா புரொடக்சன்ஸ், தமிழ்குமரன், "மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படம் எடுத்துருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்".

நடிப்பா? இயக்கமா?

இயக்குநர் சஞ்சய், " கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்"

மேலும் படிக்க | ‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema