SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Bigg Boss 10 : நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட பிளாக் பாண்டி! காரணம் என்ன? மீண்டும் வருவாரா..?

Bigg Boss 10 Tamil : பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளராக இருந்து ப்ளாக் பாண்டி, நள்ளிரவில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 09, 2026, 11:45 IST | Updated: Sep 09, 2026, 12:02 IST
Image Credit: Black Pandi | X Page
Join

Bigg Boss 10 Tamil : பிக்பாஸ் 10 தமிழ் நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பாக 19 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அனைவருமே மக்களுக்கு எண்டர்டெயினிங் ஆக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் விளையாடி வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவராக இருக்கிறார், பிளாக் பாண்டி.

பிளாக் பாண்டி:

தமிழ்நாட்டின் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகராக இருப்பவர், பிளாக் பாண்டி. இவருக்கு பெரிய மேடையை அமைத்து கொடுத்ததும் சின்னத்திரைதான். மதுரையை சேர்ந்த இவர், கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ‘பாண்டி’ எனும் கேரக்டரில் அறிமுகமாகினர். பின்னர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். கில்லி, அங்காடித்தெரு உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில், மூவர் ஸ்டேஜில் நிற்க வைத்து, பின்னர் அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அதில் ஃபில்டர் செய்யபட்டு உள்ளே அனுப்பப்பட்டவர்தான், பிளாக் பாண்டி.

மேலும் படிக்க | டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் : டம்மி விலைக்கு விற்கப்பட்ட ரூ.600 கோடி படம்! கடசியில இப்படி ஆயிருச்சே..

விளையாட்டை புரிந்த போட்டியாளர்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இந்த 10வது சீசனில் வந்திருக்கும் போட்டியாளர்கள் பலர் கேமை புரிந்து கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் போலத்தான் தெரிகிறது. அதில், பல விஷயங்களை சரியாக பேசும் ஒருவராக இருந்தார், பிளாக் பாண்டி. வீட்டில் அனைத்து போட்டியாளர்களிடமும் இணக்கமான சூழலை உருவாக்கி, நட்புடன் பழகுவது, செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்றிருக்கிறார். அமைதி பண்பை கொண்டிருக்கும் இவர், நேற்று நள்ளிரவு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸில் இந்த முறை, நள்ளிரவு டாஸ்க் நடந்திருக்கிறது. அதில், பிளாக் பாண்டியும் கலந்து கொண்டார். இரவு 2 மணி வரை நடைபெற்ற முதல் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிலும், பிளாக் பாண்டி தன்னால் முடிந்த அளவிற்கு உழைத்தார்.

வெளியேறியது ஏன்?

பிளாக் பாண்டிக்கு பிக்பாஸ் வீட்டில் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிச்சன் டீமில், அனைவருக்கும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை செய்து கொண்டிருந்த போது அவருக்கு மருத்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர், பிக்பாஸ் மருத்துவக்குழுவின் பரிந்துரைப்பட், தற்காலிகமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பிளாக் பாண்டி வெளியேறியதை தொடர்ந்து, 19ஆக இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 18ஆக குறைந்திருக்கிறது.

மீண்டும் வருவாரா?

இதுவரை எத்தனையோ முறை பிக்பாஸில் இருப்பவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். போன சீசனில் கூட ஒரு பெண் போட்டியாளர், தன்னால் இங்கிருக்கும் அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்று கூறி, ஒரே இரவில் வீட்டை விட்டு வெளியேறினார். நடிகர் பரணி, இந்த சீசனில் இருந்து தப்பியோட முயற்சி செய்திருக்கிறார். 7வது சீசனில் கூல் சுரேஷும் அப்படி ஒருமுறை தப்பியோட முயன்றார்.

உடல் நிலை காரணமாக, ஒரு சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு அவர்களுக்கு உடனடியாக உதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு உடல்நிலை தேரிய பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்படி, பிளாக் பாண்டியும் மீண்டும் போட்டிக்குள் வருவாரா, அல்லது அவருக்கு மாற்றாக வேறு யாரும் போட்டிக்குள் வருவார்களா என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | அஜித்தை நேரில் சந்திக்கும் CM விஜய்? என்ன விஷயம்? இதோ முழு விவரம்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES