தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர், தற்போது கார் ரேஸில் பிசியாக இருக்கும் நிலையில் விஜய் அவரை நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
சினிமாவில் இருந்த காலத்தில், விஜய்யையும் அஜித்தையும் அனைவரும் போட்டி நடிகர்கள் என்றே கூறுவர். இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் வந்து, ஒரே நேரத்தில் வளர்ந்து, ஒரே நேரத்தில் உச்சத்தை தொட்ட நடிகர்களாக இருந்தனர். தற்போது ஒரு நிலையை எட்டிய பின் முதல்வர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு சென்று விட்டார். அஜித்தும் சினிமாவில் மட்டும் நடிக்காமல் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
அஜித்தும் விஜய்யும், சினிமாவில் இருந்த போது அவர்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், அவர்களின் ரசிகர்கள் எப்போதும் தங்களுக்குள் மோதிக்கொண்டே இருந்தனர். விஜய்யும் அஜித்தும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், அவர்களின் ரசிகர்கள் மட்டும் இன்னும் மாறாமலேயே இருக்கின்றனர்.
முதல்வர் விஜய், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் தொழில் முதலீடு காரணமாக லண்டன் செல்ல இருக்கிறார். தற்போது நடிகர் அஜித் குமார், லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில், தன்னுடைய குழுவினருடன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் முதல்வர் விஜய்யும் அங்கு செல்ல இருப்பதால், அவர் அஜித்தை நேரில் சந்தித்து பேச இருபப்தாகவும், அங்கு நடக்கும் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட இருப்பதகாவும் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய், லண்டனுக்கு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவருடைய இந்த பயணம் வரும் 16ஆம் தேதி வரை தொடரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், லண்டன் பயணம் மேற்கொள்ளும் போது அஜித்தை அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டாலும், இந்த பயணம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், மலேசிய பிரதமர், வரும் 10ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார். இதன் பிறகு, 13ஆம் தேதி சென்னைக்கு அவர் வருவதற்கு திட்டமிட்டிருக்கும் நிலையில், அவரை தமிழ்நாட்டின் முதல்வரான விஜய் நேரில் சந்தித்து வரவேற்க வேண்டும் என்பதால், அவருடைய லண்டன் பயணம் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித் குமார், ஒரு பக்கம் கார் ரேஸ், இன்னொரு பக்கம் ஆவணப்படம், இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் உடனான படம் என பிசியாக இருக்கிறர். சமீபத்தில், அவருடைய படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட் வந்திருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஜித்தின் ஆவணப்படமான Gladiators திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, அஜித்தின் 64வது படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாலினி அஜித்குமார் இயக்குகிறார். இதன் பணிகள், அஜித் கார் பந்தயத்தில் இருந்து திரும்ப வந்த பின்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.