கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் நடித்திருக்கும் திரைப்படம், டாக்ஸிக். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கேஜிஎஃப் திரைப்படம் மூலம், அகில உலகளவில் பெரும் புகழ் பெற்றவர் யாஷ். இவரது நடிப்பில், அனைவரும் எதிர்பார்த்திருந்த ’டாக்ஸிக்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வெளியானது. இந்த படம், ஆங்கிலம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் உருவான இந்த படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியிருந்தார்.
டாக்ஸிக் திரைப்படம், தற்போதுவரை உலகளவில் சுமார் ரூ.338 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்த படம், சுமார் ரூ.293 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டாக்ஸிக் திரைப்படத்தில், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் யாரையுமே சரியாக இப்படத்தில் பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு அனைவருடைய மனங்களிலும் இருந்தது. இந்த படத்தில் தேவையற்ற 18+ காட்சிகள் இருந்ததாகவும், தேவையற்ற பஞ்ச் மற்றும் வயலன்ஸ் படத்தை கெடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எந்த படமும் பொதுவாக திரைப்படங்களில் ரீ-ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடி டீல் செய்யப்பட்டு விடும். அந்த வகையில், டாக்ஸிக்கும் பெரிய விலைக்கு விற்கப்பட இருந்ததாம். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ஒரு பிரபலமான ஓடிடி தளம் அப்படத்தை சுமார் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை கொடுத்து வாங்க முன் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், படம் ஹிட் ஆன பின்பு இன்னும் அதிக விலைக்கு படம் விற்கப்படும் என நினைத்து இந்த ஆஃபரை, டாக்ஸிக் திரைப்படம் நிராகரித்து விட்டதாம். படம் ரிலீஸிற்கு பிறகு, படத்தை பெரிய விலைக்கு விற்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது படம் ஃப்ளாப் ஆனதால் அவர்களுக்கு பேரிடி விழுந்துள்ளது.
டாக்ஸிக் படத்தை வாங்க, ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆஃபர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இந்த ஓடிடி டீல் இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்றும், படக்குழு ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் நேரத்தில், தொடர்ந்து இவ்வளவு குறைவான ஓடிடி விலைக்கு ஒப்பு கொள்வார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.