• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சீமான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரை திமுக பொதுவேட்பாளராக அறிவிக்குமா என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Oct 30, 2026, 04:10 PM IST|Updated: Oct 30, 2026, 04:18 PM IST
joinshare
அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்
Image Credit: Seeman (Left), MK Stalin (Right) | Screen Grab : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

2

53 vs 48... தேவை 61.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை இஸ்ரேலை ஆளப்போவது யார்? -தீர்மானிக்கும் அரபு கட்சிகள்

3

TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

4

Explainer: மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்: ரூ.77.98 கோடியை வாரி வழங்கிய மத்திய அரசு

5

ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அம்பாசமுத்திரம் தொகுதி தமிழக அரசியல் களத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வென்றவர்கள் மீது தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்தது.

மேலும் படிக்க | அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டி - திமுக, அதிமுகவின் பொது வேட்பாளரா?

5 தொகுதிகள் காலியாக உள்ளன

எனவே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும், சத்யபாமா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆக தேர்வானார்கள்.

அதேநேரத்தில் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார், எனவே அந்த தொகுதியும் காலியாக உள்ளது. தற்சமயம் பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்பதே தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூன்று முனை போட்டியால் நெருக்கடி

பொதுத்தேர்தலில் வென்ற அதிமுக நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இரண்டு தொகுதிகளிலும் 2வது இடத்திற்கு வந்தது. மூன்று முனை போட்டி என்பதால் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தவெகவும் இந்த 2 தொகுதிகளிலும் வென்றது.

இந்தச் சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் (அக். 29) திருநெல்வேலியில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  முத்துராமலிங்கனார் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கனார் நினைவிடத்திற்கு இன்று சீமான் வருகை தந்தார்.

மேலும் படிக்க | தவெகவினர் பேசும் அவதூறுகளுக்கு நடவடிக்கை இல்லை - சீமான்

பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி... சீமான்

முத்துராமலிங்கனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக நிற்பது குறித்து நானே தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் பொதுவேட்பாளர் என கிளப்பிவிடுவதே தவெகவினர்தான்.

நான் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என பலர் விரும்புகின்றனர்; அம்பாசமுத்திரத்தில் போட்டி என்பதில் உறுதியாக உள்ளேன். தேர்தலில் போட்டியில்லை என திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் முடிவெடுக்கவில்லை.

திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என எப்படி கூறுவேன்?, பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி வேண்டாம் என்பானா?; திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் என்னை ஆதரித்தால் ஏற்பேன். இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பதை கூட்டணி என கருதக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கூறியது என்ன?

முன்னதாக, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த  முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் சீமானுக்கு அம்பாசமுத்திரத்தில் ஆதரவளிப்பீர்களா என்ற கேள்விக்கு, "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அதுகுறித்து பேசலாம்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை திமுக, அதிமுகவின் பொதுவேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டியிட்டால், அம்பாசமுத்திரத்தில் தவெக vs நாதக என களம் மாறும். ஆளும் தவெகவுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ரூ.5,000 கோடி மோசடி: கைதான BLM பிரேம்குமார் யார்? இவருக்கும் CM விஜய்க்கும் தொடர்பா? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin