SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : இன்ஸ்டா பிரபலத்தின் விபரீத முடிவு..முத்துக்குமரன் காரணமா? நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன், தன்னை ஏமாற்றியதாக கூறி, இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 08, 2026, 11:20 AM IST | Updated: Oct 08, 2026, 11:31 AM IST
Join

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வெற்றியாளர், முத்துக்குமரன். இவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் எனும் பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது குறித்து 4 நிமிடத்திற்கும் மேலான வீடியோவை வெளியிட்ட அவர், அதனை சில மணி நேரங்களில் டெலிட் செய்து விட்டார். அந்த வீடியோவில் அவர் பேசிய விஷயங்கள் என்ன? முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் என்ன? இது குறித்து தெளிவாக இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் முத்துக்குமரன்:

பிக்பாஸில் நுழைவதற்கு முன்பு முத்துக்குமரன் ஒரு சேனலில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு பல்வேறு பிரபலங்களையும் பேட்டி எடுத்து வந்தார்.

முத்துக்குமரனுக்கு தமிழ்பேச்சு எங்கள் மூச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஒரு பெரிய முகாந்திரம் கிடைத்தது. இதனால் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனில் முத்துக்குமரன் முக்கிய போட்டியாளராக இருந்தார். அதாேடு, அந்த சீசனின் டைட்டிலையும் பெற்றார்.

அதன் பிறகு, சமூக வலைதளங்களிலும் பொது வாழ்க்கையிலும் முத்துக்குமரனின் மவுசு கூடியது. இப்போது, தமிழ்நாட்டின் பிரபலமாக இருக்கும் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார்.

முத்துக்குமரன் குறித்து குற்றச்சாட்டு..

இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர், வஹிதா அக்தர். இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மாத்திரை போடுவதும், சிகரெட் பிடிப்பது, மது அருந்துவதும் பதிவாகி இருந்தது. இதை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார்.

வஹிதா அக்தர், அந்த வீடியோவில் தான் 2 மாதங்கள் பிரேக்-அப்பில் இருந்ததாகவும் அக்டோபர் 4ஆம் தேதி கத்திப்பாராவில் முத்துக்குமரனை எதேச்சியாக சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படியே தன்னை வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு நிறைய காதலை காண்பித்ததாகவும், தாங்கள் உடலுறவு கொண்டதாகவும் பேசியிருக்கிறார்.

அதற்கு முன்பாகவே தான் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பவள் என்றும், 5 வருட உறவு பிரேக்-அப்பில் முடிந்த சோகத்தில் தான் இருக்கிறேன் என்பது முத்துக்குமரனுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதனால் தனக்கு சீரியஸான ஒரு உறவுதான் வேண்டுமென கூறினால், அவர் பேச்சே மாற்றி பேசுவார் என்றும் கூறியிருக்கிறார். தான் 100 சதவீதம் மூவ் ஆன் ஆக ரெடியாக இல்லை என்று சொன்ன போது, “நான் சீரியசா இருக்கிறேன் என்று ப்ரூவ் பண்ணனுமா? நாளைக்கே கூட தாலி கட்டுகிறேன்” என்று அவர் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | கார்த்திக் சுப்புராஜின் ‘இந்த’ படம் மொக்கைதான்! டோரதி வெற்றிவிழாவில் மிஷ்கின் சர்ச்சை பேச்சு..

எல்லாம் முடிந்த பிறகு தான் எந்த உறவிற்குள்ளும் செல்வதற்கு இப்போது தயாராக இல்லை என்று கூறியதால் தான் உடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். தான் ஏற்கனவே ஒரு உறவில் இருந்து பிரேக்-அப்பில் இருப்பவள் எனும் பட்சத்தில் தான் ஏன் இன்னொருவரை நம்பினோம் என்று யோசித்ததாகவும் கூறியிருக்கிறார்.

”உன் விருப்பம் இல்லாமல் நான் உன்னை தொட மாட்டேன்” என்று முத்துக்குமரன் தன்னிடம் திரும்ப திரும்ப கூறியதாகவும் தனக்கு ஆயிரம் ஆயிரம் முத்தம் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். “காலையில் தாலி கட்டிவிடுவேன்” என்று அவர் சொன்னதை நம்பிய தான் ஒரு முட்டாள் என தெரிவிக்கும் வஹிதா, இந்த சம்பவம் முடிந்த மறுநாளே தன்னை வீட்டில் ட்ராப் செய்த அவர், மீண்டும் தனக்கு டெக்ஸ்ட் செய்யும் போது, “மீண்டும் உன்னை எப்போது பார்க்கலாம்?” என்று கேட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில், தான் முத்துக்குமரனை தப்பு சொல்ல விரும்பவில்லை என்றும், எப்போதும் தன் மீது தவறு இருப்பது போல தனக்கு அவர் உணர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வீடியாேவின் இறுதியில், தன் வாழ்வில் அனைத்துமே தவறாக செல்வதாகவும், தன் அதை முடித்துக்கொள்ள வேண்டும் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வஹிதாவின் தற்போதைய நிலை என்ன?

வஹிதா, தற்போது உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக ஒரு இன்ஸ்டா ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறார். கூடவே, முத்துக்குமரன் “இந்த மூஞ்சிய எனக்கு பிடிச்சிருக்கு..” என்று கூறும் 3 விநாடிகள் கொண்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

முத்துக்குமரன் சொல்வது என்ன?

முத்துக்குமரன், இது குறித்து ஒரு தனியார் சேனலிடம் பேசியிருக்கிறார். அதில், தானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள் என்றும், அவர் ஏன் இப்படி செய்தார் என்பது தனக்கு சத்தியமாக புரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இது குறித்துதான் கிளாரிட்டி கேட்டு கொண்டிருப்பதாக கூறிய அவர், வஹிதா கொஞ்சம் டிஸ்டர்ப்ட் ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யார் இந்த வஹிதா?

வஹிதா அக்தர், சில மாதங்களுக்கு முன்பாக புர்க்கா பாேட்டுக்கொண்டு நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதைடுத்து, அவருடைய ஊரை சேர்ந்த பல பேர் வஹிதாவிற்கும், அவருடைய தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், தன் ஊரில் எவ்வளவோ பேர் குழந்தை கடத்தல் செய்வதாகவும், பாலியல் வன்கொடுமைகள் செய்வதாகவும் குறிப்பிட்டு, அதிலெல்லாம் போகாத மானம், தன்னால்தான் போய் விட்டதா? என்று கேட்டார். பின்பு ஹிஜாப்பில் வீடியோ போடுவதை நிறுத்தினார்.

வஹிதா, முத்துக்குமரனை பற்றி பேசியிருக்கும் இதே சமயத்தில் அவருடைய பழைய வீடியாேக்கள் பற்றியும் அனைவரும் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES