• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?

Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?

பிரபல இந்திய நடிகரான நானா படேகர், தன்னுடைய 75வது வயதில் உயிரிழந்தார்; இவர், கோவாவில் உள்ள அவர் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 08:05 AM IST|Updated: Oct 08, 2026, 08:40 AM IST
joinshare
Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?
Image Credit: Nana Patekar Death | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

2

8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, பதவி உயர்வு.... அஞ்சல் துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

3

திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

4

Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?

5

“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய திரையுலகில், முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர், நானா படேகர். இவருக்கு 75 வயது ஆகிறது. தமிழிலும், ரஜினிக்கு வில்லனாக ‘காலா’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இவரை கோவாவில் உள்ள வீட்டில் கண்டெடுத்துள்ளனர். 

நானா படேகர் உயிரிழப்பு!

இந்தியாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக விளங்கியவர் நானா படேகர். இவர், கோவாவில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் தங்கியிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவருடைய மருத்துவக்குழு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டிற்குள் வந்து பார்க்கும் போது, நானா படேகர் மயங்கிய நிலையில்  இருந்துள்ளார். பின்னர், அவர் மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். 

அங்கு மருத்துவர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின்பு, தொடர்ந்து 45 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து, அவரது உயிரை காக்க தீவிர முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அவர் அதிகாலை 5.20 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானா படேகரின் உடல், இன்று உடற்கூறாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக அவரது இறப்பிற்கு என்ன காரணம் என கண்டுபிடிக்கும் பொருட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜாம்பவான் நடிகர்!

நடிகர் நானா படேகர், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரையுலகில், பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரை கவர்ந்தவர். இவர் நடித்த பரிந்தா, கிராந்திவீர், அப் தக் சப்பன்ஹீ, பிரஹார், வெல்கம் உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பினாலேயே புகழ் பெற்றது. இப்போதும் கூட இவர் நடித்த ஒரு படத்தில் இவர் சிரிக்கும் காட்சி உலகளவில் பிரபலமான மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ரஜினி பட வில்லன்!

நானா படேகர், முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் பொம்மலாட்டம். இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இதற்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்துதான், பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். ரஜினி அந்த படத்தின் ஹீரோ என்றால், நானா படேகர் அப்படத்தில் ஹீரோயிக் வில்லனாக தெரிந்தார்.

தேசிய விருதுகள் வாங்கியவர்:

நானா படேகர், மூன்று தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற நடிகர் ஆவார். இவருக்கு அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. இவருடைய மறைவு திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நானா படேகரின் கடைசி படம்!

நடிகர் நானா படேகர், தன் வாழ்நாள் முழுவதும் நடிப்புக்காக அர்ப்பணித்தவராக இருக்கிறார். இவர் கடைசியாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ ரோமியோ எனும் திரைப்படத்தில் இஸ்மாயில் கான் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமாகும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cinema