கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘டோரதி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் வெற்றிவிழா நடத்தப்பட்டது. அதில் பேசிய மிஷ்கின், கார்த்திக்கின் ஒரு திரைப்படத்தை மொக்கை படம் என்று கூறினார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இந்த படம் குறித்து பேசிய மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு படத்தை ‘மொக்க படம்’ என்று கூறினார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
கர்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்படம்
சமீபத்தில், டோரதி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமூகத்திற்கு தேவையான கருத்தை கூறியதாக இந்த படத்தை பலரும் பாராட்டியிருந்தாலும், இன்னும் சிலர் இப்படத்தை கடுமையாக விமர்சித்தனர். இந்த படத்திற்கு தடை செய்ய வேண்டும் எனும் அளவிற்கு பேசினர். இருப்பினும், அனைத்தையும் தாண்டி படம் வெற்றி பெற்றது.
2/5
டோரதி படத்தை பாராட்டியவர்களுக்கு வந்த பிரச்சனை
டோரதி திரைப்படம் வெளியான போது, அதை பார்த்த இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்டோர் பாராட்டினர். இந்த படத்தை விமர்சித்தவர்கள், இதை பாராட்டியவர்களையும் விமர்சித்திருந்தனர். அப்படி விமர்சிக்கப்பட்டவர்களில் மிஷ்கினும் ஒருவர். சமீபத்தில் டோரதி படத்தின் வெற்றிவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜின் ஒரு திரைப்படத்தை ‘மொக்க படம்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
3/5
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள்
கார்த்திக் சுப்புராஜ் குறைவான படங்களை எடுத்திருந்தாலும், அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. அவரது முதல் படமான பீட்ஸா அனைவரையும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து அவர் எடுத்த ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ, டோரதி உள்ளிட்ட படங்களில் ஒரு சில மட்டுமே சரியான அங்கீகாரத்தை பெற தவறின. இதில் ஒரு படத்தைதான் மிஷ்கின் ‘மொக்க படம்’ என்று கூறினார்.
4/5
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படம்
மிஷ்கின் சொன்ன அந்த படம் வேறு எதுவுமில்லை, ரெட்ரோதான். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், அவ்வளவான வரவேற்பை பெறாமல் ஏமாற்றியது. இந்த படத்தை மிஷ்கின் ஏன் மொக்க படம் என்று கூறினார் தெரியுமா?
5/5
ரெட்ரோ படத்தை மொக்கை படமென கூறிய மிஷ்கின்
“டோரதி படத்திற்கு முன்பு கார்த்திக் ஒரு படம் பண்ணினார் (ரெட்ரோ) அது ஒரு மொக்க படம்தானே? நான் பார்த்தேன் அந்த படத்தை. அதுதான், நான் பார்த்த கார்த்திக் சுப்புராஜின் முதல் படம். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கிள் ஷாட் காட்சியெல்லாம் மொக்கையாக இருந்தது. எனக்கு அதை சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருந்ததுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.