மக்கள் அதிகம் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் நடைப்பெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் குமரன், பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது அனைவருக்கும் கடும் அதிரச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது எக்ஸிட் போலவே, வேறு எந்தெந்த போட்டியாளர்கள் பணப்பெட்டியுடன் வெளியேறியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த முதல் இரண்டு சீசன்களில், பணப்பெட்டி டாஸ்க் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. 3வது சீசன், பலரையும் மகிழ்வித்த ஒரு சீசன் ஆகும். இந்த சீசனில், கவின்,சாண்டி, முகேன் ராவ் உள்ளிட்டோர் முக்கிய டாப் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர். இவர்கள் மூவரும் இந்த நிகழ்ச்சிக்குள் செய்த ரகளை மக்களை வெகுவாக கவர்ந்தது.
3வது சீசனின் முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவின், கண்டிப்பாக இறுதிப்போட்டியாளராக வந்து வெற்றி பெறுவர் என பலரும் எதிர்பார்த்தனர். நாமினேஷனில் அவ்வப்போது சிக்கினாலும், எப்படியாவது தப்பித்து விடுவார். இப்படியே 94வது நாள் வரை கடந்தார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்காமல், வைக்கப்பட்ட ரூ.5 லட்சம் பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு, தாமாகவே கவின் வெளியேறினார்.
பிக்பாச் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தவர், சிபி சந்திரன். இவர், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார். இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார். முதல் நாளில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நிகழ்ச்சிக்குள் நுழைந்த அவர், ஆரம்பம் முதலே திறமையாக விளையாடி வந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. இந்த தொகை அவ்வப்போது மாறிக்கொண்டே வந்ததை அடுத்து, அது ரூ.12 லட்சத்தை நெருங்கியவுடன் அவர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டார். இது, அவரது சக போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் சீசன் 6 - அமுதவாணன்:
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், விஜே கதிரவன். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலிருந்தே அமைதியாக இருந்தாலும், ஆங்காங்கே தெளிவாக பேசியதால் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது.
இதில், அந்த தொகை ரூ.3 லட்சத்தில் இருந்தது. தான் இங்கிருந்து வெளியில் போனால் போதும் என்பது போல அந்த தொகையுடன் இருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு விஜே கதிரவன் வெளியேறி விட்டார். இதனால் அவருடன் வீட்டில் நட்புடன் பழகிய ஷிவின் உள்ளிட்ட பலர் கோபமடைந்தார்.
அந்த பணப்பெட்டி டாஸ்க் சரியாக விளையாடப்படாதது போல தோன்றியதால் மீண்டும் ஒரு பணப்பெட்டி வைக்கப்பட்டது. அப்போது அமுதவாணன், ரூ.12 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இவர் நிறைய குழப்பங்களுக்கு பின்தான், இந்த பணப்பெட்டியை எடுப்பது என்கிற முடிவிற்கே வந்தார். இல்லையெனில், அவரும் டாப் ஃபைனலிஸ்ட்களில் ஒருவராக வந்திருப்பார் என்று கூறப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் பணப்பெட்டி டாஸ்க் கொஞ்சம் வித்தியாசமாக நடத்தப்பட்டது. இதில், குறிப்பிட்ட தூரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வருபவர்கள் வெற்றியாளர்களாக இருந்தனர். இதில் கலந்து கொண்ட முத்துக்குமரன், அவித்ரா, விஜே விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றனர். முக்கிய போட்டியாளராக இருந்த ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணப்பெட்டியுடன் வர தவறியதால் அவர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடியும் முன்பே, ரசிகர்களால் வெற்றியாளராக கருதப்பட்டவர், கானா வினோத். இவர், தான் ஜெயிக்கவில்லை என்றால், தன் குடும்பத்திற்கு நிதி ரீதியாக உதவ முடியாது என்று நினைத்து, 96ஆம் நாளில், ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இவர், பணப்பெட்டியுடன் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சில வாரங்களேயான பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், ஆரம்பத்திலேயே பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. இதில், கேப்டன் எக்ஸிட் போர்டில் நாமினேட் செய்யப்பட்டு எவிக்ட் ஆன சவின்யா, ஜாவீத், லட்சுமி பிரியா, குமரன் உள்ளிட்ட 6 போட்டியாளர்களுக்கு இடையே ரூ.5 லட்சம் கொண்ட Money Box டாஸ்க் வைக்கப்பட்டது. பணப்பெட்டியை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதில், குமரன் கண்ணீருடன் ரூ.5 லட்ச பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது, Bigg Boss 10 நிகழ்ச்சியின் மற்றுமொரு திருப்பமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.