டிசம்பரில் திரைக்கு வரும் படங்கள்! ட்ரெின் முதல் லவ் பைட் வரை..முழு லிஸ்ட்
டிசம்பர் மாதம், எந்தெந்த படங்கள் திரைக்கு வர இருக்கிறது தெரியுமா? மொத்த லிஸ்டை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த வருடம், பல்வேறு திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதில் சில வெற்றியும், சில தோல்வியும் அடைந்தன. இந்த சமயத்தில், டிசம்பரில் மட்டும் எந்தெந்த படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இருண்ட வானம்:
இருண்ட வானம் திரைப்படத்தை, ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இண்டஹ் படம், டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெயின் திரைப்படம்:
விஜய் சேதுபதி ஹீரோவக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ட்ரெயின் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளர். இப்படத்தின் மீது பலருக்கும் அதீத எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு காரணம், இப்படத்தில் பல்வேறு ஷாட்கள் பக்குவமாக கையாளப்பட்டுள்ளது. இப்படம், டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
லவ் பைட்:
சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், லவ் பைட். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது தமிழில் உருவாகியிருக்கும் ஜாம்பி படங்களுள் ஒன்றாகும். இப்படம், வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சேர நாட்டு யானை தந்தம்:
பூலோகம் ரவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், சேர நாட்டு யானைத்தந்தம். இந்த படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, கிராமிய சூழலில் உருவான கதையாகும். இதில், காதல், கோபம், துரோகம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படமாகும்.
அறிவு திரைப்படம்:
நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவான திரைப்படம்தான், அறிவு. உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர்தான் விஜயகுமார். தொடர்ந்து, உரியடி 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறார். டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தை பார்க்க பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.
பீட்ஸா பாய்ஸ்:
சேகர் கேசவ் சிரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம், பீட்ஸா பாய்ஸ். இப்படம், டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம், தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் பிழைப்பு தேடி பெங்களூரு வரும் ஐந்து இளைஞர்களின் நட்பு, லட்சியம் மற்றும் எதிர்பார்ப்பு வாழ்க்கை பயணத்தை இப்படம் பேசுகிறது. இதில் சிவம் சங்கர், ஆல்பியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், கலகலப்பான கதைக்களத்தின் பின்னணியில் உருவாகி இருக்கிறது.
மிஸ்டர் பாரத்:
மிஸ்டர் பாரத், திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை நிரஞ்சன் மணியன் பிள்ளை ராஜு இயக்கி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி, சுதன் உள்ளிட்டோர் இதை தயாரிக்கின்றனர். சம்யுக்தா விஸ்வநாதன், நிதி பிரதீப், பால சரவணன், ஆதித்யா கதிர், ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
க்ளிக் :
ஓவிய நடிப்பில், க்ளிக் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கிளிக்' எனும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் 'கிளிக்', உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | ‘அயன்’ பட வில்லனா இது..? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்களேன்...வைரல் போட்டோ