SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Fact Check : அமைச்சர் ராஜ்மோகனுக்கு மரியாதை செலுத்தாத ரம்யா கிருஷ்ணன்? நடந்தது என்ன?

அமைச்சர் ராஜ்மோகன், சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன், எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 05, 2026, 15:37 IST | Updated: Sep 05, 2026, 15:47 IST
Image Credit: Rajmohan | X Page
Join

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், கட்டா குஸ்தி 2. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா லட்சுமி அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

கட்டா குஸ்தி 2 நிகழ்ச்சி:

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

வருகை தந்த அமைச்சர் ராஜ்மோகன்:

இந்த விழாவிற்கு அமைச்சர் ராஜ்மோகன் வருகை தந்தார். அவர் உள்ளே நுழைகையில், அனைவரும் அவருக்கு எழுந்து நின்று வணக்கம் கூறினர். ஐஸ்வர்யா லட்சுமி உள்பட படத்தின் பிற குழுவினர் அவருக்கு எழுந்து வணக்கம் தெரிவிக்கையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததாக சில வீடியோக்கள் இணையத்தல் வைரலாகி வருகின்றன. இது உண்மைதானா?

கால் மேல் கால் போட்டு அமர்ந்தாரா?

அமைச்சர் ராஜ்மோகன் உள்ளே நுழையும் போது, படக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னது உண்மைதான். ஆனால், ரம்யா கிருஷ்ணன் எழுந்து நிற்கவே இல்லை என்று கூறப்படுவது முற்றிலும் உண்மை கிடையாது. அமைச்சர் ராஜ் மோகன் வரும் போது அனைவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தார். அப்போது ரம்யா கிருஷ்ணனும், எழுந்து நிற்க முடியாமல் திணறி பின்பு அமர்ந்தவாறே வணக்கம் சொன்னார். அமைச்சர் ராஜ் மோகனும் வணக்கம் சொல்லிவிட்டு ஐஸ்ர்யா லட்சுமிக்கு அருகில் அமர்ந்தார். அனைவரும் அமர்ந்த பின், நடிகை ரம்யா கிருஷ்ணன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

இதை பலர் சித்தரித்து, “அமைச்சர் ராஜ்மோகனை நீலாம்பரி ஸ்டைலில் ஹேண்டில் செய்த ரம்யா கிருஷ்ணன்” என்று பரப்ப ஆரம்பித்தனர். அவர் ஏன் கால் மேல் கால் போட்டார் என்று வேறு ஒரு கூட்டம் கேள்வி கேட்டு வருகிறது. இது, ஒரு நடிகையை வைத்து பிற நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விரும்பிகளாக இருப்பவர்கள் செய்யும் செயல் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் ராஜ்மோகன் பேசியது:

அமைச்சர் ராஜ்மோகன் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,  ”என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். மேலும், சட்டமன்றத்தில் தினம் தோறும் குஸ்திதான் என்றும் ஜோக் அடித்தார்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES