• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்பாேவதாக தகவல் பரவிய நிலையில், தற்போது அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வாேம்.

Written ByYuvashree M
Published: Sep 05, 2026, 14:14 IST|Updated: Sep 05, 2026, 14:21 IST
joinshare
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..
Image Credit: ஜெயிலர் 2 | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ரஜினிகாந்த், கடைசியாக நடித்து முடித்திருந்த திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நிலவுவதாகவும், சொல்லப்பட்ட ரிலீஸ் தேதியில் இருந்து படம் தள்ளிப்போவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், 2023ல் ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம், ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் ரோலில் நடித்திருப்பார். அவருடன் முக்கிய கதாப்பாத்திரங்களில், ரம்யா கிருஷ்ணன், விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம், சில மாதங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்டது.

ஜெயிலர் 2 திரைப்படடம், முதல் படத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திலும் முதல் படத்தை போலவே, நடிகர்கள் மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ரித்திக் ரோஷன், பாலையா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியில் மாற்றமா?

ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வரும் போது, இப்படம் 2026 ஆகஸ்டில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த அறிவிப்புகளில் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பில், படம் வரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போதும் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடுவதாக ஒரு தகவல் பரவி வந்தது.

மேலும் படிக்க | பீரியட்ஸ் ஆயிடுச்சி! நாப்கின் இல்லை-நடிகைக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவல நிலை..

ரீ-ஷுட்டால் தாமதமா?

ஜெயிலர் 2 திரைப்படத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள், சரிவர இல்லாததால், அந்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டன. இதனால், ப்ரொடக்ஷன் பணிகள் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனது. இதையடுத்து, இந்த ரீ-ஷூட்டால் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்பட்ட நிலையில், சினிமா வட்டாரங்களில் அந்த தகவல் உண்மையல்ல என்று கூறப்படுகிறது. படக்குழுவும் 3 நாட்களுக்கு முன்பாக, முன்பு கூறியே அதே அக்டோபர் 15ஆம் தேதியைத்தான் ரிலீஸ் தேதியாக அறிவித்திருக்கிறது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Sun Pictures (@sunpictures)

மோதும் திரைப்படங்கள்:

ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது அதன் கூடவே ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா நடித்த ரனபலி என்கிற திரைப்படமும் திரைக்கு வருகிறது. அத்தோடு சேர்த்து, தனுஷின் ஓம் திரைப்படத்தையும் அக்.16 வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ரேஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 10 வீடு எப்படி இருக்கு? பாத்ரூமில் மைக்-ஆ? இதோ விவரம்..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema