SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 3 படங்கள்! சீன் to ராமாயணா..எதை எந்த தேதியில் பார்ப்பது?

தீபாவளி பண்டிகை, இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி, இந்த நாளில் எந்தெந்த படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 03, 2026, 10:50 AM IST | Updated: Nov 03, 2026, 11:09 AM IST
Join

2026ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, பல பேர் இந்த நாளில் தியேட்டரில் தங்களின் குடும்பத்துடன் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருப்பர். இதையடுத்து, இந்த தீபாவளிக்கு எந்தெந்த திரைப்படங்களை தியேட்டரில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

சீன் திரைப்படம்:

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், சீன். இந்த படத்தை ஜீத்து மாதவன் இயக்கி இருக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார்.

சீன் படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நஸ்லேன் பயங்கர வில்லனாக நடித்துள்ளார். சூர்யா, பல நாட்களுக்கு பிறகு சீன் திரைப்படத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லன் கதாப்பாத்திரத்தில், ‘ஈஸ்வரனாக’ நஸ்லேன் நடித்துள்ளார். இப்படம், இந்த வருடத்தில் சூர்யாவிற்கு பெரிய வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இம்மாதம் (நவம்பர்) 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

மூக்குத்தி அம்மன் 2:

நயன்தாரா அம்மனாக நடித்திருந்த திரைப்படம், மூக்குத்தி அம்மன். இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சில வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை, சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.

முந்தைய படத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனையை பேசி, அதற்கு தீர்வு காண்பது போல படம் அமைந்திருக்கும். இந்த பாகத்தில், மூக்குத்தி அம்மன் ஒரு இளவரசனை தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவதுதான் இந்த படத்தின் கதை. Past - Present என இரு காலங்களில் இக்கதை நிகழ்வது போல இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், மஹா எனும் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படம் நவம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ராமாயணா:

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ராமாயனா : பாகம் 1. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாக நடித்திருக்கிறார். சாய் பல்லவி, சீதை தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் கேஜிஎஃப் புகழ் யாஷ், ராவணன் கதாப்பாத்திரத்தில் வருகிறார். இப்படம், இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வரும் (நவம்பர்) 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம், ஒரு சில திரையரங்குகளில் 3டி ஃபார்மேட்டிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் பிரிபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மரும் இசையமைத்திருக்கின்றனர்.

இப்படம், இந்த வருடம் இந்தியாவில் உருவானதிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படமாக இருக்கிறது. இதனை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

எந்த பெரிய ஹீரோவின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை..

வழக்கமாக, தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள்தான் ரிலீஸ் ஆகும். ஆனால், இம்முறை எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இவர்களின் படங்கள் இல்லாம் தீபாவளியே முழுமையடையாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

மேலும் படிக்க | ஜென்டில்மேன் படம் ரீ-ரிலீஸ்! எப்போ ரிலீஸ் தெரியுமா..? இதோ முழு விவரம்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES