SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிக்பாஸ் பாலாஜி வீட்டில் போதைப்பொருள் சோதனை! வைரலாகும் வீடியோ..பரபரப்பு பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தன் வீட்டில் போலீஸார் சோதனை நடத்த வந்ததாக ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 09, 2026, 10:37 IST | Updated: Nov 09, 2026, 11:34 IST
Image Credit: Balaji Murugadoss | பாலாஜி முருகதாஸ்
Join

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம், அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர் பாலாஜி முருகதாஸ். இவர் வீட்டில், போதைப்பொரு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதாக கூறி ஒரு பதிவை அவர் வெளியிட்டிருக்கிறார்.

பாலாஜி முருகதாஸ் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவருடைய வீட்டில், நவம்பர் 8ஆம் தேதியான நேற்று ரெய்டு நடந்ததாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தன்னுடைய வீட்டில் நேற்று இரவு போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 15 காவலர்கள் ரெயிடு செய்தனர் என்று தன் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், தன் மீது புகார் அளித்தது யார் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் மீது புகார் அளித்தது யார் விஜய்? எதற்காக அளித்தார்? எனக்கு தெரிய வேண்டும்” என்று முதல்வர் விஜய்யின் ‘@actorvijay’ கணக்கை டேக் செய்திருக்கிறார்.

இறுதியில் கண்டுபிடித்தது என்ன?

காவல்துறை தான் எத்தனை முறை கேட்டும் பதிலளிக்கவில்லை என்று கூறும் அவர், ரத்த பரிசோதனை செய்துகொள்ளக்கூட நான் தயார் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். மேலும், “15 காவலர்கள் வந்தனர். இறுதியில் அவர்கள் கண்டுபிடித்தது எலலம் 3 பூனைகளையும் ஒரு நாயையு மட்டும்தான்” என்று கூறியிருந்தார். இவர்கள் எந்த அடிப்படையில் தன்னிடம் வந்தார்கள் என்பதை அறிய விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

தன்னிடம் எந்த தவறும் இல்லை என்பதால், Search Warrant எதுவும் இல்லாமலேயே அவர்களை தான் வீட்டிற்குள் அனுமதித்ததாகவும், ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டிப்பாக தனக்கு விளக்கம் வேண்டும் என்றும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மக்கள் என் பக்கம், அடுத்தது என்ன? ‘ஓம்’ பட விழாவில் உண்மையை உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைத்துறையினர்!

சில வருடங்களுக்கு முன்னர், போதைப்பொருள் விஷயத்தில் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, பின்பு ஜாமினில் வெளியே வந்தனர். இட்னஹ் விவகாரத்துக்கு பிறகு, திரைத்துரையினர் மீது போதைப்பொருள் தடுப்பு படையினர் கண்காணிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகக்கூட, பாலாஜி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் அவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாரிசு அரசியலுக்கு எதிராக பேசியவர்..!

திமுக கட்சியை பலர் ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சிப்பர். அப்படி, விமர்சித்த நபர்களுள் ஒருவர்தான் பாலா. இவர், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, திமுகவிற்கு எதிரான ட்வீட்களை பதிவிட்டு வந்தார். திமுக, காலம் காலமாக வாரிசு அரசியல் செய்து வருவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருந்த அவர், திமுகவை முழுவதுமாக எதிர்ப்பதாகவும், தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையப்போகிறேன் எனவும் ட்வீட் போட்டிருக்கிறார். இது, அவர் பதிவுகளை வெளியிட்ட சமயத்தில் கடும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போதும் அவர் அதே போன்ற பரபரப்பான ஒர் ட்வீட்டைதான் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உமாபதி ராமையா எங்கே? அர்ஜுன் 2வது மகள் திருமணத்திற்கு செல்லாதது ஏன்? வெளியான தகவல்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES