தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர், நடிகர் அர்ஜுன். தன்னுடைய ப்ருஸ்லீ லெவல் சண்டைக்காக பெயர் போன இவருக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். இதில், மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி திருமணம் செய்து கொண்டார்.
அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா, கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியை சேர்ந்த இசையா என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திருமண புகைப்படங்கள் வெளியானது. இத்தாலியில் உள்ள லேக் கோமோ எனும் இடத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்கள், இத்தாலியின் டுஸ்கானி எனும் இடத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் 14 வருட காதலுக்கு இரு தரப்பினரும் பச்சைக்கொடி காண்பித்ததை அடுத்து, இந்த திருமணம் நடைப்பெற்றது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்த இந்த திருமணத்திற்கு, பெரும்பாலானோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், நெருங்கிய உறவினர்கள் நிறைய பேர் இருந்த சமயத்திலும், அர்ஜுனின் மூத்த மகளுடைய கணவரான உமாபதியையும், சம்பந்தியான தம்பி ராமையாவையும் காணவில்லை. இதனால் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஐஸ்வர்யா, தன் தங்கையின் திருமணத்திற்கு முன்னாடியே வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டார். அங்கு, தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஷாப்பிங் செய்வது, டின்னர் போவது என்றிருந்த அவர் அந்த பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். அந்த போட்டோக்களில் அவர் தனியாகவே இருந்தார். இதையடுத்து, ஏன் அவருடைய கணவர் அவருடன் இல்லை எனும் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
நடிகை ஐஸ்வர்யா, தனக்கு உமாபதியுடன் நிச்சயம் ஆனது முதல் தன்னுடைய மோதிரத்தை கையில் அணிந்திருந்தார். ஆனால், சமீப நாட்களாக அந்த மோதிரமும் அவருடைய கையிலிருந்து மிஸ் ஆகி இருக்கிறது. இதனால், இவர்கள் ஒன்றாக இருக்கின்றனரா இல்லையா என்கிற சந்தேகம், ரசிகர்களுக்கு எழுந்தது.
அஞ்சனாவின் திருமணத்தில்தான் உமாபதி கலந்து கொள்ளவில்லையே தவிர, அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த போது, உமாபதி இத்தாலியில்தான் இருந்தார் என கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் முடிந்து 15 நாட்களிலேயே திருமணமும் முடிந்திருக்கிறது. அங்கு இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சென்னையில் ஒரு முக்கிய வேலை இருந்ததால் அதை பார்க்க உமாபதி இங்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உமாபதியும், ஐஸ்வர்யாவும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு, இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம், அர்ஜுனுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடந்தது. பின்னர் திருமண வரவேற்பு லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருப்பது இரு வீட்டாரையும் திடுக்கிட செய்துள்ளது.