போட்டோ எடுக்கும் சாக்கில்..நடிகையின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்! வைரலாகும் வீடியோ..
பிரபல நடிகை ரச்சிதா, சமீபத்தில் தன்னுடை ரசிகர்களை சந்தித்தார். அப்போத அவருடன் செல்பி எடுத்த ரசிகர் ஒருவர் அந்த சாக்கில் அவருடைய கன்னத்தை கிள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர், ரச்சிதா ராம். கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில், அவர் தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடும் போது, அவருடைய கன்னத்தை ரசிகர் ஒருவர் கிள்ளிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் இந்த ரச்சிதா ராம்?
தென்னிந்திய திரையுலகில், டிம்பிள் குயின் என அழைக்கப்படும் நடிகையாக இருக்கிறார், ரச்சிதா ராம். இவர், கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய அப்பா ஒரு நடனக்கலைஞர், சகோதரி நித்யாவும் ஒரு நடிகை. குடும்பமே சினிமா மற்றும் கலை பின்னணியை கொண்டவர்களாக இருப்பதால், இவரும் கலைத்துறையிலேயே ஈடுபட்டார். பின்னர் அவருக்கு கன்னடத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2013ல் வெளியான புல்புல் படத்தில் நடித்து பிரபலமான ரச்சிதா ராம், தொடர்ந்து தமிழிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கூலி படத்தில் நடித்தவர்..!
நடிகை ரச்சிதா ராம், கடந்த ஆண்டு கூலி படத்தில் கல்யாணி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பத்தில் அப்பாவி போல வந்த கல்யாணி, பின்பு வில்லியாக உருவெடுப்பார். இந்த திருப்பத்தை எதிர்பாராத ரசிகர்கள், தியேட்டரில் ஆர்ப்பரித்தனர். இந்த படத்தை தொடர்ந்து, அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
பிறந்தநாள் கொண்டாட்டம்!
நடிகை ரச்சிதா ராம், சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, இவரை அவருடைய ரசிகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடை மீது நின்றிருந்த அவருடன் பல ரசிகர்கள் கைகுலுக்கி, வாழ்த்து சொல்லி சென்றனர்.
கன்னத்தை கிள்ளிய ரசிகர்!
ரச்சிதா, தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக கன நேரத்தில் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார். இதையடுத்து ஷாக்கான ரச்சிதா, பின்னர் புன்னகைத்தார். இந்த புன்னகை மூலம் அவர் தன் அசெளகரியத்தை மறைத்தாரா, அல்லது உண்மையாகவே சிரித்தாரா என்பது அவருக்குதான் தெரியும்.
மேலும் படிக்க | மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு
அசெளகரியமாக உணர்ந்தாரா?
ரச்சிதா ராமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் அசெளகரியமாக உணர்ந்த இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரச்சிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுத்தார். அப்போது அந்த ரசிகர் போனை மேலே தூக்கி செல்பி எடுக்கப்பார்த்தார். அப்போது, போனை தனக்கு நேராக கீழே வைத்து எடுக்கும் படி கையை தட்டி விட்டார் ரச்சிதா ராம். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் பிறந்தநாள் கொண்டாட்டம்:
கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், ரச்சிதா ராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்று வருகிறது. அவருக்கு ஆளுயர பெரிய மாலையை அணிவிப்பது, செல்லமாக கண்ணத்தை தடவி முத்தம் கொடுப்பது உள்ளிட்டவற்றை ரசிகர்கள் செய்வது, வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் லெவலுக்கு ரச்சிதாவிற்கு ஹைப் கொடுப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 10 : 3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைலட் கார்ட் என்ட்ரி! யார் தெரியுமா?