• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம்! தமிழில் வேம்பயர் கதை..

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம்! தமிழில் வேம்பயர் கதை..

ஏகே ஃபில்ம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Written ByYuvashree M
Published: Aug 31, 2026, 18:16 IST|Updated: Aug 31, 2026, 18:28 IST
joinshare
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம்! தமிழில் வேம்பயர் கதை..
Image Credit: immortal | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இம்மார்டல் படத்தின் முன்னோட்ட விழாவில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.

ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு: 

“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.

கயாடு லோஹர்:

கயாது லோஹர் குறித்து பேசிய போது, அவர் ”இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

”ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema