2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..
2026ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பல கோடி சம்பாதித்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு, பல நல்ல படங்கள் வெளியாகி, தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தின. பாக்ஸ் ஆபிஸை தாண்டி ஒரு சில குறைவான பட்ஜெட் படங்கள், நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இந்த நிலையில், இந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படங்கள் என்னென்ன எனும் லிஸ்டை இங்கு தெரிந்து கொள்வோம்.
துரந்தர் 2:
இயக்கம் : ஆதித்யா தார்
நடிப்பு : ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், ஆர்.மாதவன்
இசை : சஷ்வத் சாச்தேவ்
முந்தைய பாகம் : துரந்தர் 1
ஸ்பை த்ரில்லர், ஆக்ஷன் பாணியில் எடுக்கப்பட்ட படம்தான், துரந்தர் 2. இந்த படம் சுமார் ரூ.300 கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால், இதன் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.1,813 கோடி ஆகும். இந்தியாவின் கலக்ஷன், ரூ.1,375.39 கோடி, நெட் கலக்ஷன், சுமார் ரூ.1,149.30 ஆகும்.
மேலும் படிக்க | கைதாகும் பிக்பாஸ் முத்துக்குமரன்? 5 நாட்களாக தலைமறைவு..பாலியல் புகார் எதிரொலி
ராமாயணா:
இயக்குநர் : நித்தேஷ் திவாரி
நடிப்பு : யஷ், ரன்வீர் சிங், சாய் பல்லவி, ரவி துபே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
அடுத்த படம் : ராமாயணா பாகம் 2
இதுவரை இந்திய சினிமாவில் எக்கச்சக்கமாக ராமாயணா திரைப்படங்கள் வந்துள்ளன. இவ்வளவு ஏன், சீரியல்கள் கூட வந்துள்ளன. ஆனால், இந்த ராமாயணா திரைப்படம் அவற்றுள் ஸ்பெஷலாக கருதப்பட்டது. காரணம், இந்த படத்தில் பலமான கிராஃபிக்ஸ் செய்திருந்தனர். அதே போல, பல்வேரு மொழிகளில் முக்கிய பிரபலங்களாக இருப்பவர்கள் இதில் நடித்திருந்தனர்.
ஜெயிலர் 2 :
இயக்கம் : நெல்சன் திலீப்குமார்
நடிப்பு : ரஜினிகாந்த், மின்ரா, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரபோத்தி
இசை : அனிருத்
முந்தைய பாகம் : ஜெயிலர் 1
ஜெயிலர் 2 திரைப்படம், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த படம், இண்டஸ்ட்ரி ஹிட் ஆக இருக்கிறது. முந்தைய பாகமான ஜெயிலர் 1 திரைப்படத்தை அடுத்து அதன் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி இருந்தது. இதுவரை தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படம் எனும் பெருமையையும் ஜெயிலர் 2 பெற்றிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
த்ரிஷ்யம் : தி கன்க்ளூஷன்
இயக்கம் : அபிஷேக் பத்தாக்
நடிப்பு : அஜய் தேவ்கன், ஷ்ரேயா, ஜெய்தீப் அஹல்வாத்
இசை : ரவி பஸ்ரூர்
த்ரிஷ்யம் திரைப்படத்தின் ட்ரயாலஜியில், 3வது பாகம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இருந்தது. இதில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதன் இந்தி ரீ-மேக் மலையாளத்தை விட அதிக வரவேற்பை பெற்றது. இதன் உலகளாவிய வசூல் சுமார் ரூ.589.16 கோடி என கூறப்படுகிறது. அதே சமயத்தில், இந்தியாவின் கிராஸ் கலக்ஷன் ரூ.455.96 கோடி என கூறப்படுகிறது. நெட் கலக்ஷன் ரூ.380.86 கோடி.
ஹனுமான் அன்ஷ்:
இயக்கம் : விஷால் சதுர்வேதி
நடிப்பு : பூர்ணிமா திவாரி, சந்தன் கே. ஆனந்த், ரவி மிஷ்ரா, அனில் ரஸ்தோகி
இசை : சாது எஸ்.திவாரி
ஹனுமான் அன்ஷ் திரைப்படம், சுமார் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவானது. இப்படம், உலகளவில் ரூ.452.53 கோடி வசூல் அள்ளியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி பலரையும் ஈர்த்தது.
பார்டர் 2 :
இயக்கம் : அனுராக் சிங்
நடிப்பு : மேதா ராணா, ஆஹான் ஷெட்டி, சன்னி தியோல், ஆன்யா சிங், வருண் தவான், சோனம் பாஜ்வா
இசை : அனு மாலிக்
பார்டர் 2 திரைப்படம், உலகளவில் சுமார் ரூ.449.44 கோடி வரை வசூலித்தது. இந்த படத்தின் இந்திய கிராஸ் கலக்ஷன் ரூ.392.19 கோடி ஆகும். இப்படமும், இந்தியாவில் மாபெறும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
மேலும் படிக்க | ஓவர் நைட்டில் மீம் டெம்ப்ளேட்டாக மாறிய இயக்குநர் நெல்சன்! வைரலாகும் போட்டோ